Home Latest News Tamil கூகிள் அல்லோ செயலியின் செயல்பாட்டை நிறுத்திய கூகிள்

கூகிள் அல்லோ செயலியின் செயல்பாட்டை நிறுத்திய கூகிள்

482
0
கூகிள் அல்லோ

கூகிள் அல்லோ செயலியின் செயல்பாட்டை நிறுத்திய கூகிள்

2016-ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளியிடப்பட்ட இந்த செயலி வாட்ஸ்ஆஃப், டெலிகிராம் போன்ற உடனடித் தகவல் அனுப்பும் ஒரு மெசேஜ்ஜிங் ஆஃப் ஆகும்.

கூகிள்அல்லோ, கூகிள்டுயோ ஆகிய இரண்டு செயலிகள் ஒரே நாளில் வெளியிடப்பட்டது. கூகிள் டுயோ ஒரு வீடியோ காலிங் ஆஃப் ஆகும்.

போதிய அளவு பயனாளர்கள் இல்லாத காரணத்தால் கடந்த டிசம்பர் மாதம் கூகிள் அல்லோ (Google Allow) செயலியின் செயல்பாட்டை முழுமையாக நிறுத்தப்போவதாக கூகிள் நிறுவனம் தெரிவித்தது.

இறுதியில் கூகிள் இன்றைக்குத் தான் இந்த செயலியின் செயல்பாட்டை நிறுத்தியது. இதனால் இதன் பயனாளர்கள் அனைவரின் தகவல்களும் முழுமையாக அழிக்கப்பட்டு விடும்.

ஏற்கனவே சேமிக்கப்பட்டிருந்த பேக் அப்களும் முழுமையாக அழிந்து விடும் என கூகிள் தெரிவித்துள்ளது.

மார்ச் 12-ஆம் தேதிக்குப் பிறகு முழுமையாக அனைத்தும் அழிந்து விடும் அதற்கு முன் வேண்டுமென்றால் நீங்கள் உங்களுடைய மெனுவில் சென்று உங்களுடைய மெசேஜ்-யை மட்டும் பேக் அப் செய்துகொள்ளலாம்.

மேலும் கூகிள் மெசேஜ்ஜிங் ஆஃப் ஹேங்க் அவுட்ஸ் (Hangouts) மீது மட்டுமே முழுக் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.

இன்னும் சில மாதங்களில் கூகிள் பிளஸ் செயலியின் செயல்பாடும் முழுமையாக நிறுத்தப்படும் என்று ஏற்கனவே கூகிள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleதேர்தலில் ஜெயித்தால் இந்தியன் 2; தோற்றால் தேவர் மகன் 2
Next articleஇந்தியா ஆஸ்திரேலியா வாழ்வா சாவா இறுதி ஒரு நாள் போட்டி
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here