தேர்தலில் ஜெயித்தால் இந்தியன் 2; தோற்றால் தேவர் மகன் 2
நடிகர் கமல், ஷங்கர் இயக்கத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் இந்தியன் 2. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது.
பர்ஸ்ட் லுக் காட்சிகள் எல்லாம் வெளியான நிலையில் திடிரென படப்பிடிப்பு நின்று போனது. அதற்கு காரணம் படத்தின் பட்ஜெட் எனக் கூறப்பட்டது.
ஷங்கர் இந்தப் படத்தின் பட்ஜெட் தொகையை இத்தனை கோடிகளுக்குள் முடிப்பேன் என எந்த வாக்குறுதியையும் லைகா நிறுவனத்திடம் கொடுக்கவில்லை.
இதனால் உஷாரான லைகா படத்தின் பட்ஜெட் தொகையைக் கூறிவிட்டு படத்தை துவங்கலாம் எனக் கூறிவிட்டது.
இதனால் படம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. கமல்ஹாசனும் தேர்தல் பணிகளைப் பார்க்கத் துவங்கிவிட்டார்.
இந்தியன் 2 விற்காக போடப்பட்ட செட்டுக்கு நாள் ஒன்றுக்கு வாடகை மட்டுமே 50000 ஆயிரம் செலவு ஆகின்றதாம்.
இதனால் லைகா ஒரு முடிவு செய்துள்ளது. கமல் இந்த தேர்தலில் குறிப்பிட்ட வாக்குவங்கியைப் பெற்று அரசியலில் வரவேற்பு பெற்றால் இந்தியன் 2 துவங்கலாம் என முடிவு செய்துள்ளது.
கமல் ஒரு பக்கம் தேர்தல் பணிகளை கவனித்து வந்தாலும் மறுபக்கம் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே காய் நகர்த்தத் துவங்கிவிட்டார்.
தென் தமிழகத்தில் உள்ள தேவர் சமூக ஓட்டுக்களைப் பெற தேவர் மகன் 2 படத்தில் நடப்பது என ஒரு முடுவும் எடுத்துள்ளாராம்.
இதன் மூலம் சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட வாக்குவங்கியைப் பெற உதவும் என இந்த முடிவை எடுத்துள்ளார்.
தேர்தலில் குறிப்பிட்ட சதவீதம் வாக்கு வாங்கி கிடைத்தால் இந்தியன் 2. சரியாக வாக்குகள் கிடைவில்லை எனில் தேவர் மகன் 2 படத்தில் கமல் நடிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.