GV Prakash and Gautham Menon; ஜிவி பிரகாஷ் – கௌதம் மேனன் கூட்டணிக்கு விஜய் பட பாடல் டைட்டில்! ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திற்கு விஜய் படத்தில் வரும் பாடலின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திற்கு விஜய்யின் கத்தி படத்தில் வரும் பாடலின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு இயக்குநரைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றவர் இயக்குநர் கௌதம் மேனன்.
ஆனால், அண்மையில், திரைக்கு வந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில், டிசிபி பிரதாப் சக்ரவர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்தில், அவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் அவருடன் இணைந்து கௌதம் மேனன் நடிக்க இருப்பதாக அண்மையில் கூறப்பட்டது.
இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக 96, வெற்றிவேல், பிகில் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தில் கௌதம் மேனன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இயக்குநர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மதிமாறன் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்திற்கு செல்ஃபி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது விஜய் நடித்த கத்தி படத்தில் வரும் செல்ஃபி புள்ள பாடலை கொண்டு இந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்த பிறகு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.