GV Prakash Baby Photo: ஜிவி பிரகாஷ் குழந்தையின் பெயர் என்ன? சைந்தவி-ஜிவி பிரகாஷ் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. saindhavi baby photo.
ஜிவி பிரகாஷ், பாடகி சைந்தவி தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஜிவி பிரகாஷ். நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் வலம் வருகிறார்.
கடந்த 2013-ல் பின்னணி பாடகியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜிவி இசையில் சைந்தவி பல பாடல்களை பாடியிருக்கிறார்.
இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் சைந்தவி தம்பதியினருக்கு நேற்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக ஜிவி தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் ஜிவி பிரகாஷூக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் டுவிட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அவரின் குழந்தை புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. ஆனால் அது குறித்து ஜிவி எந்த ஒரு தகவலும் கொடுக்கவில்லை.
குழந்தையின் பெயர் பிறப்பதற்கு முன்பே முடிவு செய்துள்ளனர். இருப்பினும் பெயரை இன்னும் வெளியில் கூறவில்லை.
மேலும், ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் வெய்யோன் சில்லி பாடல் நேற்று 10 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக வந்த சூரரைப் போற்று மேக்கிங் வீடியோவும் 2 நாட்களில் 1 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்தது.
தற்போது ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஐங்கரன், 4ஜி, ஜெயில், ஆயிரம் ஜென்மங்கள், பேச்சிலர், காதலிக்க யாருமில்லை, காதலை தேடி நித்யா நந்தா, அடங்காதே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.