Kamal Haasan; கமல் கொடுத்த பரிசு: போட்டோவை பகிர்ந்து வாழ்த்திய ஹாலிவுட் நடிகை! தான் சிறுவயதாக இருக்கும் போது கமல் ஹாசன் தனக்கு உடை பரிசாக அளித்தார் என்று ஹாலிவுட் நடிகை மெக்கன்ஸி வெஸ்ட்மோர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் நடிகை மெக்கன்ஸி வெஸ்ட்மோர் நடிகர் கமல் ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
கமல் ஹாசன் நடிப்பில் வந்த அவ்வை சண்முகி, தசாவதாரம் ஆகிய படங்களில் ஒப்பனையாளராக பணியாற்றியவர் வெஸ்ட்மோர். இவரது மகள் மெக்கன்ஸி வெஸ்ட்மோர் ஹாலிவுட் படங்களில் நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருகிறார்.
இந்த நிலையில், மெக்கன்ஸி வெஸ்ட்மோர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு கமல் ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நான் சிறிய குழந்தையாக இருக்கும் போது கமல் ஹாசனின் பல கதாபாத்திரங்களுக்கு எனது அப்பா மேக்கப் செய்துள்ளார்.
நான் கமல் ஹாசனை சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. நானும், எனது அப்பாவும் கமல் ஹாசன் பரிசாக கொடுத்த உடைகளை அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், கமல் ஹாசனுடன் நாங்கள் இன்னும் தொடர்பில் தான் இருக்கிறோம். ஆனாலும், அவரை பார்க்க முடியவில்லை.
அவரைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.