திரௌபதி படமாக முழுமையான நிறைவு தந்ததா? சாதரண ரசிகனாக இல்லாமல் ஒரு சினிமா கலைஞனாக திரௌபதி படம் எப்படி உள்ளது எனப்பார்க்கலாம்.
திரௌபதி படம் எப்படி உள்ளது
கடந்த வாரம் பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியான படம் தான் திரௌபதி, படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனதில் இருந்து படம் பற்றி சாதி ரீதியாக பல ஆதரவுகள் பல எதிர்ப்புகள் கிளம்பின.
ஒரு வழியாக படமும் வெளியானது, க்ரவ்டு ஃபண்ட் மூலம் தயாரித்து வெளியான முதல் திரைப்படம். மோகன் இயக்கத்தில் ரிச்சார்ட் ரிஷி மற்றும் ஷீலா ராஜ்குமார் நடித்திருக்கும் படத்தில் ஜுபின் இசை அமைத்திருக்கிறார்.
நடிப்பில் சொதப்பிய திரௌபதி குழு
குறைந்த பட்ஜெட் படமா இருந்தாலும் படத்தில் நடிகர்கள் பேசும் போது வசனங்களுடன் ஒட்டவில்லை. சில நடிகர்களிடம் இயக்குனர் நடிப்பு வாங்கவேயில்லை.
திரௌபதி கதாபாத்திரத்திற்கு முதல் பாதியில் கொடுத்த பில்டப்புகள் அளவிற்கு கதாப்பாத்திரம் அழுத்தம் இல்லாதது பின்னடைவு. நடிகை பேசும வசனங்கள் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் அளவிற்கு இருந்தது.
அது மட்டுமா டாக்டர் கதாபாத்திரம், யூடியூப்பர் கதாபாத்திரம், நடிகையின் தங்கை, வில்லன்கள், இரண்டு போலீஸ் கதாபாத்திரம் (இன்னும் போலிஸாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை) இவர்கள் நடிப்பு குறும்படத்தில் வருவது போல இருந்தது.
நடிகை பேசும் போது, தியேட்டகளில் படம் பார்க்கும் போது இடைவேளையில் வரும் அரசு விளம்பரங்களில் வருவது போலவே இருந்தது.
ஐஸ்பக்கெட் சேலஞ்ச் போன்று மரம் நடும் சேலஞ்ச் தியேட்டகளில் பொறுமையை சோதித்தது.
வேண்டுமென்றே திணிக்கப்பட்ட கருத்துகள்
படத்தில் கருத்து சொல்வதை தவறாக சொல்லவில்லை, கருத்து கருத்தாக படம் எடுத்தால் கதையின் சுவாரஸ்யம் குறைகிறது. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பும் குறைந்துவிடும்.
மாநகரம், தெகிடி, உறியடி, பிட்சா போன்ற படங்களும் குறைந்த செலவில் எடுக்கப்பட்டது தான். அதில் நடிகர்களிடம் இயக்குனர்கள் நன்றாக வேலையை வாங்கி இருப்பார்கள். நடிக்கவும் வைத்து இருப்பார்கள்.
கதை, நல்ல நடிப்பு, பாடல்கள் மூலமே ஒரு படத்தின் வெற்றிகள நிர்ணயம் செய்யப்படுகிறது. சர்ச்சைகளாளும், அரசியல்வாதிகளும், வசூல் ரீதியாகவும் படத்தின் வெற்றி நிர்ணயம் செய்வது நாடக கலை பின்னோக்கி செல்கிறது.
திரைப்படமாக தோற்ற திரௌபதி
படத்தில் அருமையான, அழுத்தமான கதை இருந்தும் திரைக்கதையில் கோட்டைவிட்டனர். படத்தின் இறுதி காட்சிகள் உட்காந்து பார்க்கும் அளவிற்கு இல்லை, ரொம்ப நீளமாக இழுத்தார்கள்.
ஃபளாஷ் பேக் சீனில் நடிகையின் தங்கை படதிற்க்கு சென்றுதான் இருப்பார், அதற்குள் அவரது தந்தை உயிர் விடுவதெல்லாம் நம்பும் படியாக இல்லை.
திரௌபதியாக நடிகை என்ன செய்தார்? அவரது கதாப்பத்திரம் ஒரு போன் மட்டுமே வைத்து எதையும் செய்துவிடலாமா?
மக்களின் விழிப்புணர்வு காணொளி போல இருந்தது. நடிகர் ரிச்சார்ட் நடிப்பில் பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவே இல்லை.
இவரும் அதிக இடங்களில் வசனங்கள் பேசும் போது பாடி லாங்குவேஜ் செட் ஆகவே இல்லை. வாய்ஸ் கூட நகர்ந்தது. இதையெல்லாம் சரி செய்திருக்கலாம்.
படத்தில் விறுவிறுப்பு என்று ஒன்றுமே இல்லை, அனைவரும் எதிரப்பார்த்த படம், சினிமா ரசிகர்களை கொஞ்சம் கூட பூர்த்தி செய்யவேயில்லை.
படத்தின் இயக்குனர் சில சமூக வலைதளத்தில் பேசும் போதுகூட தன் இயக்குனர் சிறப்பை, நடிகரின் நடிப்பை, படத்தின் திரைக்கதையோ பேசவில்லை அதில் பிரச்சினை மற்றும் எதிர்ப்பாளர்களை மட்டுமே சாடி வருகிறார்.
பழைய வண்ணாரப்பேட்டை படத்தை எடுத்த விதம் அருமையாக இருக்கும், இயக்குனராக மோகன் தன் வேலையை சிறப்பாக செய்திருப்பார்.
ஆனால் திரௌபதியில் கருத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததால் படமாக தியேட்டர்களில் பார்க்கும் அளவிற்கில்லை.