Home சினிமா கோலிவுட் Ponmagal Vandhal: பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ் லுக் போஸ்டர் இன்று வெளியீடு!

Ponmagal Vandhal: பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ் லுக் போஸ்டர் இன்று வெளியீடு!

381
0

ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் பொன்மகள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோதிகா தனது திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கால்பதித்தார். இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு இவரது நடிப்பில் ராட்சசி, ஜாக்பாட், தம்பி ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்றது. தற்போது ஜேஜே பெட்ரிக் இயக்கத்தில், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் படம் பொன்மகள் வந்தாள்.

இப்படத்தில், இவருடன் இணைந்து கே பாக்யராஜ், ஆர் பார்த்திபன், பிரதாப் போத்தன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைக்கிறார். த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் அடுத்தபடம் குறித்த அறிவிப்பு வெளியானதும், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து அறிவிப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்குப் பிறகும் ஜோதிகா – சூர்யா இருவருரது கூட்டணியில் படங்கள் வெளியாகி வருகிறது. ஆனால், என்ன ஜோடியாக இல்லை. ஜோதிகா நடித்த 36 வயதினிலே, மகளிர் மட்டும், ஜாக்பாட் ஆகிய படங்களை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்தான் தயாரித்துள்ளது.

பொன்மகள் வந்தாள் படத்தையும் சூர்யாவின் 2டி நிறுவனம்தான் தயாரிக்கிறது. சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து சூர்யா மீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா39 (Suriya39) என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு அருவா (Aruvaa) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் முதல் முறையாக இமான் இணைந்துள்ளார். படத்திற்கு இமான்தான் இசையமைக்கிறார். வரும் ஏப்ரல் மாதம் ஒரேகட்டமாக படப்பிடிப்பு முடித்து வரும் தீபாவளி பண்டிகைக்கு படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SOURCER SIVAKUMAR
Previous articleதிரௌபதி படமாக முழுமையான நிறைவு தந்ததா?
Next articleRajinikanth: அன்பு, அமைதி, ஒற்றுமையே நாட்டின் பிரதான நோக்கம்: ரஜினிகாந்த்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here