Corona virus tips tamil. கொரோனா வைரஸ் டிப்ஸ். கொரோனா பயத்தால் வரும் மன அழுத்தம் கவலையிலிருந்து விடுபடுவது எப்படி?
உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 220000 பாதிக்கப்பட்டுள்ளனர். 8900 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 150க்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது கொரோனா தாக்கம் பற்றி நாளுக்கு நாள் கேள்விப்படும் மக்களுக்கு மன அழுத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் அதிகம் கூடும் சுற்றுலாத் தலங்கள், மால்கள், திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. காய்கறிகள், பலசரக்குக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர, மற்ற அனைத்தையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தினம் தினம் மக்கள் கொரோனா பற்றி பல்வேறு தவறான செய்திகளை சமூக வலைத்தளங்களில் படித்து பகிர்ந்து வருகின்றனர்.
சில தவறான தகவல்கள் வதந்திகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி விடுகிறது. மேலும் கொரோனா பாதித்தால் அவர்களின் மொத்த குடும்பமும் கலங்கி விடுகிறது.
சாதாரண சளி, காய்ச்சல் வந்தால் கூட மக்கள் கொரோனாவாக இருக்குமோ என எண்ணுவது அவர்களின் உடலை பலவீனப் படுத்துகிறது.
கொரோனா போன்ற கிருமிகளை நம் முன்னோர்கள் எப்படி ஓட ஓட விரட்டினர்
கொரோனாவுக்கு எதிராக மனதை திடப்படுத்துவது
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளை நம்பவேண்டாம். உலக சுகாதார மையத்தின் (WHO) வலையில் இருக்கும் தகவல்களை மட்டுமே படிக்கவும்.
அடிக்கடி கொரோனா பற்றிய செய்திகளை பார்க்காமல் பேசாமல் இருப்பது நல்லது. இது உங்கள் அன்றாட வாழ்க்கை சுமூகமாக செல்ல வழி வகுக்கும்.
உலக சுகாதார மையம் அறிவுரைப்படி சுத்தமாகவும், தெளிவாகவும் செயல்பட்டால் கோரோனோவை எளிதாக எதிர்கொள்ளலாம். மேலும் சத்தான உணவுகளாக சாப்பிட்டு உங்கள் னாய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள்.