Home நிகழ்வுகள் தமிழகம் மொபைல் விளையாட்டு வினை ஆனதா?. பப்ஜி விளையாடிய மாணவர் மரணம்: ஈரோடு

மொபைல் விளையாட்டு வினை ஆனதா?. பப்ஜி விளையாடிய மாணவர் மரணம்: ஈரோடு

பப்ஜி

தமிழ்நாடு: செவ்வாய் கிழமை மாலை ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் வீட்டிலிருந்த 16-வயது மாணவர் மொபைலில் பப்ஜி(PUBG) கேம் விளையாடிய போது மரணமடைந்தார். அவர் இறந்ததற்கான காரணம் சரியாக தெரியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தனியார் பட்டயப்படிப்பு கல்லூரி மாணவர்

இறந்தவர் கருங்கல்பாளையம் கமலா நகரில் வசித்த கே. சதிஷ்குமார் என தெரியவந்தது. இவர் தனியார் பட்டயப்படிப்பு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு துணி வடிவமைப்பாளர்(Textile designing) படிப்பு பயின்றுவந்தார் என தெரிகிறது.

மாலை 5:30 மணியளவில் மொபைலில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த பொழுது திடீரென தரையில் விழுந்தார். இவரது பெற்றோர்கள் உடனடியாக இவரை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்து தூக்கிச்சென்றனர். அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.

மொபைல் விளையாட்டு

“இவர் அந்த மொபைல் விளையாட்டில் திங்கள் கிழமை மாலை தோற்கடிக்கப்பட்டுள்ளார்,” என கருங்கல்பாளையம் காவல் துணை-ஆய்வாளர் கே. செல்லதுறை தெரிவித்தார்.

அதன் பின்னர் செவ்வாய் மாலை இவர் அந்த மொபைல் விளையாட்டை விளையாடிவுள்ளார்.

மேலும் துணை-ஆய்வாளர் தெரிவிக்கையில் அந்த பையன் இறந்ததற்கான சரியான காரணம் உடற்கூறு ஆய்விற்கு பிறகு தான் தெரியவரும் என அவர் தெரிவித்தார்.

Previous articleதயாரிப்பாளர் அவதாரம் எடுத்ததால் நடிப்பு முழுக்கு போட்ட சார்மி!
Next articleவெளிநாட்டில் இருந்த திரும்பிய 37 பேர் உட்பட 601 புதிய கொரோனா தொற்று: தமிழகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here