Home சினிமா கோலிவுட் Corona Virus: விஜய் பட நடிகை மாளவிகா மோகனன் கொரோனா அறிவுரை!

Corona Virus: விஜய் பட நடிகை மாளவிகா மோகனன் கொரோனா அறிவுரை!

548
0
Malavika Mohanan Stay Home

Malavika Mohanan; அப்பா, அம்மாவிற்காக நான் வீட்டில் இருக்கிறேன்: விஜய் பட நடிகை! தான் அம்மா, அப்பாவிற்காக மட்டும் வீட்டில் இருப்பதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

உலகத்தையே ஆட்டி படைத்து வருவது கொரோனா வைரஸ். 100 நாடுகளுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் மட்டும் 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனது அம்மா, அப்பாவிற்காக தான் வீட்டிலேயே இருக்கிறேன் என்று எழுதி புகைப்படம் ஒன்றை நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எனது பெற்றோர், சகோதரர், அன்புக்குரியவர்கள் மற்றும் நெருங்கியவர்களின் ஆரோக்கியம் தான் எனக்கு முக்கியம்.

Malavika Mohanan Corona Virus

நாங்கள் பொறுப்பற்றவர்களாகவும், அலட்சியமாகவும் இருப்பது கொரோனா வைரஸ் தாக்கத்தை அதிகரிக்கும்.

வீட்டிற்குள் இருங்கள், குடும்பத்தோடு நேரத்தை செலவிடுங்கள். உங்களது சிறிய செயலும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி சுய விழிப்புணர்வுடன் இருங்கள் என்று குறிப்பிட்ட மாளவிகா மோகனன் நீங்கள் யாருக்காக வீட்டில் இருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் மாஸ்டர். வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாஸ்டர் வெளியாவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளும் கடந்த 19 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் படத்திற்கு முன்னதாக மாளவிகா மோகனன் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோனாவை வச்சு விஜய்யை குறி வைத்த மோடி? – காமெடிக்கு ஒரு அளவு இல்லையா?
Next articleகொரோனா வைரஸ் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here