RMM Relief Work; கபசுரக்குடிநீர் வழங்கிய ரஜினி மக்கள் மன்றத்தினர்! கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் திருப்பூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் 200 குழந்தைகளுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் 200 குழந்தைகளுக்கு முகக்கவசமும் மற்றும் பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கபசுரக்குடிநீரும் வழங்கப்பட்டது.
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 166 பேர் கொரோவால் பலியாகியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும், வீட்டில் இருந்தபடியே ரசிகர்களுடன் உரையாடல், உடற்பயிற்சி செய்வது, யோகா, சமையல் செய்வது, வீட்டு வேலைகள் செய்வது என்று பிஸியாக இருக்கின்றனர்.
இந்த நிலையில், சினிமா பிரபலங்களின் ரசிகர்கள் பலரும் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர்களுக்கு உதவி வருகின்றனர்.
அந்த வகையில், திருப்பூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் 200 குழந்தைகளுக்கு முகக்கவசமும் மற்றும் பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
இதே போன்று சந்தானம் ரசிகர்கள் 144 தடையை முன்னிட்டு அன்றாட அவதிப்படும் 100 ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.