Home சினிமா கோலிவுட் விசு குடும்ப கதாநாயகன்: விசு உடலுக்கு எஸ்வி சேகர் அஞ்சலி!

விசு குடும்ப கதாநாயகன்: விசு உடலுக்கு எஸ்வி சேகர் அஞ்சலி!

724
1
Visu Passed Away

Visu Died; அவர் ஒரு குடும்ப கதாநாயகன்: விசு உடலுக்கு எஸ்வி சேகர் அஞ்சலி! உடல்நலக் குறைவால் விசு நேற்று மாலை உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடலுக்கு நடிகர் எஸ்வி சேகர் மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

விசு மறைவு

குடும்ப கதைகளை மையப்படுத்தி ஏராளமான படங்களை கொடுத்தவர் நடிகர் விசு. பிரிந்திருந்த தம்பதியினர் விசுவின் படங்களை பார்த்தாலே ஒன்று சேர்ந்துவிடுவார்கள்.

அந்தளவிற்கு கூட்டுக் குடும்பம், கணவன் – மனைவி, அண்ணன், தம்பி, அப்பா – அம்மா உறவு என்று குடும்ப கதைகளையே விசு கொடுத்துள்ளார். அது போன்ற படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

இந்த நிலையில், சிறுநீரகக் கோளாறு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த விசு, சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

விசுவின் மறைவு தமிழ் சினிமாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் உலகத்தை ஆட்டி வைக்கும் நிலையில், விசுவின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது.

விசு மறைவு செய்தி அறிந்த நடிகர் எஸ்வி சேகர் மற்றும் ஒய்ஜி மகேந்திரன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அப்போது பேசிய எஸ்வி சேகர் கூறுகையில், நானும், விசுவும் 50 ஆண்டுகால நண்பர்கள். வாடா, போடா என்று பேசும் அளவிற்கு நண்பர்களாக இருந்தோம்.

அவர் இயக்கிய முதல் படத்தில் நான் தான் ஹீரோ. அதே போன்று விசு முதன் முதலில் நடித்த படத்தில் நான் தான் ஹீரோ. ஒரு இயக்குனரோடு இணைந்து அதிக படங்களில் நடித்துள்ளேன் என்றால் அது விசுவின் படங்கள்தான்.

வாரத்திற்கு ஒரு முறை, இரண்டு முறை இருந்த டயாலிஸிஸ் அதன் பிறகு தினமும் டயாலிஸிஸ் செய்ய வேண்டியதாயிற்று.

சினிமா இருக்கும் வரை விசுவின் எழுத்துக்களும், விசுவும் சாகமாட்டார். அவரது ஆத்மா சாந்தியடை வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார்.

எஸ்வி சேகர்

என் அருமை 50 ஆண்டுகால நண்பன் நாடக திரைப்பட கதை வசனகர்தா இயக்குனர் விசு சற்றுமுன் நம்மை விட்டு பிரிந்து விட்டார்.  A GREAT LOSS.

இதையடுத்து, ஒய்ஜி மகேந்திரன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

ரஜினிகாந்த்

என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர், ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு அவர்களின் மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது.

அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்னேஷ் சிவன்

ஆளுமை நம்மை விட்டு சென்றுவிட்டார். அற்புதமான எழுத்தாளர், இயக்குநர், தனித்துவமான ஒரு நடிகர், தனது சென்டிமெண்ட் மற்றும் காமெடியான வசனங்கள் மூலம் குடும்பங்களை தொட்டவர், இன்றும் இவரது படங்கள் பேசும்.

விசு சாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

‘அரட்டை அரங்கம்’, ‘தில்லு முல்லு’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘சிதம்பர ரகசியம்’, ‘பெண்மணி அவள் கண்மணி’, ‘திருமதி ஒரு வெகுமதி’, ‘வரவு நல்ல உறவு’, ‘மணல் கயிறு’ உள்ளிட்ட பல முக்கிய படங்கள் என்றென்றும் வாழும். உங்களை மறக்க முடியாது சார்” என்று பதிவிட்டுள்ளார்.

முக ஸ்டாலின்

இயக்குநர் விசுவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள ஒக்கியம் பகுதியில் மாதா கோயில் தெருவில் உள்ள பிரபஞ்ச அபார்ட்மெண்டில் உள்ள விசுவின் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சினிமா பிரபலங்கள் பலரும் விசுவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

SOURCER SIVAKUMAR
Previous article2003 உலககோப்பை இந்தியாவின் இறுதி போட்டியை மறக்க முடியுமா?
Next articleநயகரா நீர்வீழ்ச்சி எனும் அதிசயம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here