2003-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா நாடுகளில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து அஸ்திரேலியா.
பாதுகாப்பு காரணமாக சில நாடுகள் கென்யா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் விளையாட மறுத்தன.
லீக் போட்டிகள்
12 நாடுகள் பங்கு பெற்ற இந்த உலக கோப்பையில் பிரிவு ஏ-வில் ஆஸ்திரேலியா, இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. பிரிவு பி யில் கென்யா, ஸ்ரீலங்கா, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன.
சூப்பர் சிக்ஸ் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா, கென்யா, ஸ்ரீலங்கா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
அரையிறுதி போட்டிகள்
முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவும் ஸ்ரீலங்காவும் மோதி, ஆஸ்திரேலியா அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் கென்யா அணியும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் மோதின.
இந்த போட்டிகள் 91 ரன்கள் வித்தியாசத்தில் கென்யா அணியை இந்தியா வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக முன்னேறியது.
1985 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்று இருந்தது. அதன் பிறகு இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.
1999 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் களம் இறங்கியது.
இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் கணிசமான ரன்களை இந்த உலக கோப்பையில் குவித்தார்.
மார்ச் 23 ஆம் தேதி 2003 ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வேன்டர்ஸ் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி பகலிரவு ஆட்டமாக தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
கில்கிறிஸ்ட் 57
அதன்படி களமிறங்கிய மேத்யூ ஹைடன் மற்றும் கில்கிறிஸ்ட் இருவரும் சேர்ந்து அணி 14 ஓவர்களில் 108 ரன்கள் இருந்த போது கில்கிறிஸ்ட் 57 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹைடனுடன் சேர்ந்து விளையாடினார், ஹைடன் சிறிது நேரம் மட்டுமே தாக்கு பிடித்து 38 ரன்களில் 20வது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
நான்காவது வீரராக களமிறங்கிய டேமியன் மார்ட்டின் ரிக்கி பாண்டிங் இந்திய பந்துவீச்சாளர்களை சோதித்தனர்.
ரிக்கி 140 ரன்கள்
இருவரும் சேர்ந்து இந்திய பந்துவீச்சில் சிக்சர் பவுண்டரிகளாக விளாசினார், ஆஸ்திரேலியாவின் மூன்றாவது விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறியது.
சௌரவ் கங்குலி இந்தியாவில் 8 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியும் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் எடுத்தது.
ரிக்கி பாண்டிங் 4 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 140 ரன்கள் எடுக்க, டேமியன் மார்ட்டின் 84 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து களத்தில் நின்றனர். இந்திய தரப்பில் ஹர்பஜன் மட்டும் 2 விக்கெட் வீழ்த்தினர்.
சச்சின் ஏமாற்றம்
360 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய இந்திய அணியில் சேவாக் மற்றும் சச்சின் களமிறங்கினார்கள்.
கிளன் மெக்ராத் முதல் ஓவரிலேயே நான்கு ரன்கள் எடுத்து சச்சின் டெண்டுல்கர் அவுட் ஆகி வெளியேறி இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
கடந்த இரண்டு உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் கணிசமாக ரன் குவித்து வந்தார்.
2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் அதிக ரன்கள் எடுத்த வீரர் பட்டியலில் சச்சினுக்கு அதிக ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தார்.
பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் முதல் விக்கெட்டை இழந்து இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.
டிவி ஆஃப் செய்த ரசிகர்கள்
அப்போதே இந்தியாவில் டிவியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மற்றும் மக்கள் முக்கால்வாசி பேர் டிவியை மூடிவிட்டனர். இந்திய ரசிகர்கள் நம்பிக்கையும் 80% முடிந்து போனது.
அடுத்து வந்த கேப்டன் கங்குலியின் சிறிது நேரம் தாக்குபிடித்து இந்திய அணி 58 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டாகி வெளியேறினார்.
நான்காவது வீரராக களமிறங்கிய முகமது கைப் ரன் எடுக்காமலும், அடுத்து வந்த டிராவிட் சேவாக்குடன் கூட்டணி அமைத்து 47 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்தடுத்து யுவராஜ் 24 ரன்கள், தினேஷ் மோங்கியா 12 ரன்கள், ஹர்பஜன்சிங் 7 ரன்கள் எடுத்தனர்.
சேவாக் அதிரடி
மழை மீண்டும் குறுக்கிட்டு ஆட்டத்தை தடுத்தது. மீண்டும் நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட உலக கோப்பை போட்டி மழை விட்டு சற்று நேரத்தில் மீண்டும் தொடங்கியது.
சேவாக் மீண்டும் களத்திற்கு வந்து 3 சிக்சர்களை பறக்கவிட்டு இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார்.
ஆனால் அவரும் இறுதியில் டேரன் லீமேனால் ரன் அவுட் ஆகி 81 பந்தில் 82 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஆஸ்திரேலியா வெற்றி
இந்திய அணி 39.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
ஜாகிர்கான் நான்கு ரன்னும், ஸ்ரீநாத் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர், நெகரா மட்டும் 8ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.
ஆஸ்திரேலியா தரப்பில் மெக்கிரத் 3 விக்கெட்டும், லீ மற்றும் சைமன்ஸ் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்தியா இரண்டாவது முறை உலகக் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட போது ஆஸ்திரேலியா மூன்றாவது முறை உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது.
ஆட்ட நாயகன் விருதை 140 ரன்கள் எடுத்த ரிக்கி பாண்டிங் தட்டிச்சென்றார். தொடர் நாயகன் விருதை அதிக ரன் குவித்த சச்சின் டெண்டுல்கர் தட்டிச் சென்றார்.
அன்றைய உலக கோப்பையில் சச்சினை மட்டுமே நம்பி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால் இறுதிப் போட்டியில் சச்சின் பெரிதாக சோபிக்காமல் அவுட்டானது மிகப் பெரிய ஏமாற்றமே.
இன்று இந்திய அணியின் அதுபோல வீராத் கோலியை மட்டுமே நம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வதந்திகள்
இந்த உலக கோப்பையில் பல சர்ச்சைகள் வதந்திகளும் வந்தவண்ணம் இருந்தன.
ரிக்கி பாண்டிங் பயன்படுத்திய மட்டையில் ஸ்பிரிங் பயன்படுத்தியதாகவும் அதனால் இறுதிப் போட்டியில் மீண்டும் நடைபெறுவதாகவும் வதந்திகள் வந்தன.
ஆஸ்திரேலியா வீரர்கள் போதைப்பொருளை பயன்படுத்தியதாகவும் வதந்திகள் வந்த வண்ணம் மட்டுமே இருந்தன.