இந்தியா vs ஆஸ்திரேலியா: சாதனைப் பட்டியல்
ஆஸ்திரேலியாவில் நடந்த இந்திய-ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான டெஸ்ட் தொடரை வென்று இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. 4-வது டெஸ்ட் போட்டியில் வென்றே தீரவேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது ஆஸ்திரேலியா.
ஆனால் ஆஸ்திரேலியா, தொடர்ந்து மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. 5வது நாள் ஆட்டம் எஞ்சியிருந்த நிலையில் மழையால் போட்டி நின்றது.
இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் இந்தியா டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது.
இந்தியாவின் சாதனையும், ஆஸ்திரேலியாவின் சோதனையும்
இந்திய அணியின் சாதனைகள்
- முதல்முறை ஆஸ்திரேலிய மண்ணில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
- 71 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இதுவே முதல்முறை
- ஆஸ்திரேலியாவை, சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய முதல் ஆசிய அணி, இந்தியா.
ஆஸ்திரேலியாவின் சோதனைகள்
- சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முதல்முறையாக இந்தியாவிடம் பறிகொடுத்துள்ளது.
- டெஸ்ட் போட்டியில் ஒரு ஆஸ்திரேலிய வீரர்கூடச் சதம் அடிக்காதது இதுவே முதல்முறை.
- முதல் முறையாக டெஸ்ட் வரலாற்றில் ஆஸ்திரேலியா அணி, பலோஆன் வாங்கியுள்ளது .
வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி
1947-48-ம் ஆண்டு அப்போதைய கேப்டன் லாலாஅமர்நாத் தலைமையில் இந்திய அணி முதல்முறையாக ஆஸ்திரேயா சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.
அன்றிலிருந்து இன்றுவரை எந்த கேப்டன் தலைமையிலும் கிடைக்காத வெற்றியை, விராட் கோலி தலைமையிலான அணி பெற்றுள்ளது.
இந்த வெற்றி போரடிப்பெற்ற வெற்றியில்லை. ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்து பெற்றுள்ள வெற்றி என்பது கூடுதல் சிறப்பு.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வரலாற்றில், அந்த அணி சந்தித்த மிகமோசமான தோல்வி இதுவாகத்தான் இருக்க முடியும்.
புஜாராவின் சதங்களும், பும்ராவின் பந்து வீச்சும் ஆஸ்திரேலியாவை வீழ்த்த மிகவும் பக்கபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரை, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற தொடரில் 8-ல் தோல்வியும், 3-ல் ட்ராவும், 1-ல் வெற்றியும் பெற்றுள்ளது இந்திய அணி.