Home நிகழ்வுகள் இந்தியா லடாக் எல்லை பிரச்சனை, இந்தியா மற்றும் சீனாவிற்கிடையில் படைத்தளபதிகள் மட்டத்திலான சந்திப்பு

லடாக் எல்லை பிரச்சனை, இந்தியா மற்றும் சீனாவிற்கிடையில் படைத்தளபதிகள் மட்டத்திலான சந்திப்பு

இந்தியா மற்றும் சீனாவிற்கிடையில்

புதுடெல்லி: இந்தியா மற்றும் சீனாவிற்கிடையில் லடாக் எல்லை கோட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல் பிரச்சனையை அடுத்து இருநாடுகளிலும் படைத்தளபதிகள் மட்டத்திலான சந்திப்பு நடந்துவருகின்றன, என இராணுவ வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

படைத்தளபதிகள் மட்டத்திலான சந்திப்பு

ஜீன் 6ஆம் தேதிக்கு பிறகு நடக்கும் இரண்டாம் படைத்தளபதிகள் மட்டத்திலான சந்திப்பாக இது கருதப்படுகிறது. அன்று நடந்த சந்திப்பின் போது எல்லை கோட்டின் பகுதிகளிலிருந்து கலைந்து மே 4 இல் இருந்த நிலைக்கு செல்ல சீனா சம்மதம் தெரிவித்திருந்ததாக தெரிகிறது.

இந்தியாவின் திட்ட அறிக்கைக்கு எந்த பதிலும் சீனர்களிடமிருந்து வந்ததாத தெரியவில்லை மற்றும் 10,000த்திற்கும் மேல் சீனா இராணுவத்தினரை குவித்து இருந்தது.

எல்லை கட்டுபாட்டு சட்டத்தை மாற்ற இந்தியா முயற்சி

இதை அடுத்து எல்லை கட்டுபாட்டு பகுதிகளில் அசாதாரண சூழல்களில் இராணுவத்தினர் ஆயுதங்கள் பயண்படுத்தும் படி, எல்லை கட்டுபாட்டு சட்டத்தை மாற்ற இந்தியா முயற்சித்து வருவதாக தெரிகிறது.

சீனா தரப்புடன் ஜுன் 6 இல் நடந்த சந்திப்பில், சீனா வாக்களித்தது போல் கால்வன் பள்ளத்தாக்கு மற்றும் எல்லை கோட்டின் மற்ற பகுதிகளில் இருந்து படைகளை திரும்ப பெற இந்தியா தற்போதய சந்திப்பில் கேட்கும் என தெரிகிறது.

இந்தியாவின் லடாக் எல்லை அருகே சீனா அமைத்துவரும் வான்படை குறித்தும் இந்த சந்திப்பில் இந்திய தரப்பிலிருந்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

கடந்த மாதம் முதலே சீனா மற்றும் இந்தியா எல்லையில் பதற்றம்

கடந்த மாதம் முதலே சீனா மற்றும் இந்தியா எல்லையில் நிலவும் பதற்றத்தை போக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.

கடந்த வாரம் 20 இந்திய இராணுவத்தினர் உயிர்த்தியாகம்

இருப்பினும், கடந்த வாரம் 20 இந்திய இராணுவத்தினர், சீன படையினரின் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையால் ஏற்பட்ட மோதலில் கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உயிரிழந்தனர்.

இந்த மோசமான நிகழ்வில் சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழந்து இருக்கக் கூடும் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Previous articleஎன்னது நயன்தாராவுக்கு கொரோனாவா? ஷாக்கான விக்னேஷ் சிவன் டுவீட்!
Next articleகுட்டி நயன் குட்டி விக்கி: டிரெண்டாகும் ஹலோ ஹேஷ்டேக்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here