INDvsNZ 2nd Test: இந்தியா vs நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூ சிலாந்து வெற்றி
இந்தியா vs நியூசிலாந்து
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது.
அடுத்து நடந்த ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்தியாவை நியூசிலாந்து ஒயிட் வாஷ் செய்தது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
INDvsNZ 2nd Test
நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
பிரித்தி ஷா, புஜாரா, ஹனுமன் விஹாரி மூவரும் அரைச்சதம் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நியூசிலாந்து விக்கெட் சரிவு
அடுத்து ஆடிய நியூஸிலாந்து அணி முதல்நாள் இறுதியில் நிதானமாக ஆடினாலும் இரண்டாவது நாள் முதலே விக்கெட்டுகள் சரிவு தொடங்கியது. 177 ரன்கள் 8 விக்கெட்டை இழந்தது.
அடுத்து வந்த ஜேமிசன் பந்துவீச்சில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடினார். ஜேமிசன் துணையுடன் நியூசிலாந்து அணி 235 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இரண்டாவது இன்னிங்ஸ் இந்தியா அணி
முதல் இன்னிங்ஸ் போலவே கட கடவென்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியா 90 ரன்களில் 6 விக்கெட்டை இழந்து இரண்டாம் நாளை கடந்தது.
பின்னர் இன்று களமிறங்கிய இந்தியா 124 ரன்களுக்கு அல் அவுட் ஆனது. அதிகபட்சம் புஜரா 24 ரன்கள், பந்து வீச்சில் போல்ட் 4 விக்கெட், சௌதீ 3 விக்கெட் எடுத்தனர்.
நியூ சிலாந்து இரண்டாம் இன்னிங்ஸ்
பின்னர் 132 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூ சிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் இருவரும் அரை சதமடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.
டாம் லாதம் , பிளேண்டால் இருவரும் அரைசதம் பந்து வீச்சில் பும்ரா இரண்டு விக்கெட் எடுத்தார்.