மதுரை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் முழு ஊரடங்கை ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.
பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் படி ஜூலை 12 வரை நீட்டிப்பு
ஜூன் முதல் ஜுலை 5 வரை மதுரையில் அறிவிக்கப்பட்டிருந்த முழு கொரோனா ஊரடங்கு நோய் பரவல் கட்டுக்குள் கொண்டுவர மேலும் கால அவகாசம் தேவைப்படுவதால் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் படி ஜூலை 12 வரை நீட்டிக்கப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
மதுரை மாநகராட்சி உட்பட நான்கு பகுதிகளில் முழு ஊரடங்கு
இந்த முழு கொரோனா ஊரடங்கு மதுரை மாநகராட்சி, பரவை நகர பஞ்சாயத், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவவும், முக கவசம் அணியவும்
இவ்விடங்களில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் கட்டுபாட்டு பகுதிகள் அதிகாரிகளால் தொடர் கண்கானிப்பில் இருக்கும். மக்கள் அனைவரும் கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவவும், முக கவசம் கட்டாயம் அணியவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேவை இல்லாமல் மக்கள் வெளியில் சுற்ற வேண்டாம்
சமூக விலகல் கண்டிப்புடன் கடைபிடிக்குமாறும் மற்றும் தேவை இல்லாமல் மக்கள் வெளியில் சுற்றுவதை தவிற்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.