Home சினிமா கோலிவுட் Valimai: வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடி இல்லையா?

Valimai: வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடி இல்லையா?

454
0
Ajith Valimai

Ajith Valimai Movie; அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடி இல்லை என்ற தகவல் வெளியாகி வருகிறது.

வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடி இல்லை என்கிறது தகவல்.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

நேர்கொண்ட பார்வைக்குப் பிறகு மீண்டும் அஜித் – ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணியில் வலிமை படம் உருவாகி வருகிறது.

அண்மையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள பைக் ரேஸ் காட்சியை படப்பிடிப்பும் செய்யும் புகைப்படம் வெளியானது.

இதையடுத்து, பிரமாண்ட சண்டைக் காட்சிக்கு படக்குழு ஸ்பெயின் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக ஸ்பெயின் திட்டம் கைவிடப்பட்டு படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.

போலீஸ் கதையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடி யார் என்பது குறித்து இதுவரை படக்குழுவினர் அறிவிப்பு வெளியிடவில்லை.

ஆனால், பாலிவுட் நடிகை ஹூமா குரேசி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வலிமை படம் குறித்து பேசிய இயக்குநர் ஹெச் வினோத் கூறுகையில், தல ரசிகர்களே நீங்கள் அடுத்த மங்காத்தாவான வலிமை படத்தை பார்ப்பதற்கு தயாராகுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதை வைத்து பார்க்கும் பொழுது, வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடி இல்லை என்று தெரிகிறது. ஏனென்றால், மங்காத்தா படத்தில் அஜித்துக்கு ஜோடி என்று பார்த்தால் யாரும் இல்லை. ஆனால், த்ரிஷா படத்தில் நடித்திருந்தார்.

அவருக்கு அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியான ரோல் இல்லை. ஆக்‌ஷன் த்ரில்லரை மையப்படுத்தி உருவான இப்படத்தின் கிளைமேக்ஸில் பணத்தை எடுத்துச் செல்வதுதான்.

இந்தப் படத்தில் அஜித் போலீஸ். அதுவும் அசிஸ்டண்ட் கமிஷனர். அதே போன்றுதான் வலிமை படத்திலும் அஜித் போலீஸ். அசிஸ்டண்ட் கமிஷனராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆதலால், இந்தப் படத்தில், அவருக்கு ஜோடி இல்லை. படமும் ஆக்‌ஷன் த்ரில்லரை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வலிமை படத்தில் இதுவரை ஹீரோயின் எண்ட்ரி ஆகவில்லை. ஆனால், ஹூமா குரேஸி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அப்படியே நடித்தாலும், அஜித்துக்கு ஜோடியா? இல்லை படத்தில் மட்டும் நடிக்கிறாரா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே தெரியவரும். அதுவரையில் அஜித்துக்கு ஜோடி இல்லாமல் வலிமை படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வலிமை படத்தில் வி1 படத்தின் இயக்குநர் பவல் நவகீதன் நடித்து வருகிறார்.

SOURCER SIVAKUMAR
Previous articleவிம்பிள்டன் தொடர் ரத்து; இரண்டாம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக
Next articleஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 884 பேர் பலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here