போயஸ் கார்டனில் வீடா? ஜெயம் ரவி மறுப்பு
தடம், சண்டக்கோழி 2, நீயா ஆகிய படங்களை ஸ்கீரின்சீன் என்ற நிறுவனம் தயாரித்தது. இந்த நிறுவனத்திற்கு ‘ஜெயம் ரவி’ தொடர்ச்சியாக மூன்று படங்கள் நடிக்க கால்சீட் கொடுத்துள்ளார்.
தயாரிப்பாளருக்குப் போயஸ்கார்டனில் வீடு உள்ளது. அதை எழுதி வாங்கிக்கொள்ளவே ஜெயம் ரவி தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க கால்சீட் கொடுத்துள்ளார் என செய்திகள் வெளியாகியது.
இச்செய்தி கடந்த மூன்று நாட்களாகவே பேசப்பட்டு வந்தது. ஜெயம் ரவி இதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காததால், நம்முடைய இணையதளத்திலும் “ஜெயா, ஜெயம் பெயர் ராசி ஓகே” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம்.
இதைத்தொடர்ந்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘ஜெயம் ரவி’ இந்தச் செய்தியை மறுத்து ட்வீட் செய்துள்ளார்.
இது வெறும் வதந்தி அப்படி ஒன்று நடக்கவில்லை எனக் கூறி ரசிகர் ஒருவரின் ட்வீட்டை, ரீடுவீட் செய்துள்ளார்.
செய்திகள் வந்தவுடனே மறுப்பு செய்தி வெளியிட்டால் சமந்தப்பட்ட செய்தி வைரலாக மாறாது. தொடர்ந்து அமைதிக்காத்தால் மௌனமே சம்மதம் என்று ஆகிவிடும்.