Home சினிமா கோலிவுட் Gypsy Teaser: ஜிப்ஸி டீசரை வெளியிட்ட நடிகர் சூர்யா!

Gypsy Teaser: ஜிப்ஸி டீசரை வெளியிட்ட நடிகர் சூர்யா!

402
0
Gypsy Teaser

Gypsy Teaser: ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி படத்தின் டீசரை நடிகர் சூர்யா தற்போது வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா செய்திகள்.

ஜோக்கர் மற்றும் குக்கூ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் ராஜூ முருகன். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 3-ஆவது படைப்புதான் ஜிப்ஸி. முழுக்க முழுக்க, ரொமாண்டிக் கலந்த காதல் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக, நடாசா சிங் நடித்துள்ளார். மேலும், சன்னி வெயின், லால் ஜோஸ், சுஷீலா ராமன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

வரும் மார்ச் 6-ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

இந்த டீசரில், முதலில் எந்த அமைப்பு, மாவோயிஸ்டாக இருக்குமோ என்று குரல் எழும்புகிறது. இதற்கு நான் முதலில் மனிதன் என்று ஜீவாவின் குரல் கேட்கிறது.

அதன் பிறகு உனக்கு என்று ஒரு முகம் படைக்கப்பட்டிருக்கும். அது கூடிய விரைவில் உன் கைக்கு வரும் என்று கூறும் குரல் தான் கேட்கிறது.

அதன் பிறகு ஹீரோ – ஹீரோயின் சந்திப்பு நிகழ்கிறது. அப்படியே அவர்களது காதல் காட்சிகள் தான் திரை முன்பு வந்து செல்கிறது.

இதையடுத்து, உள்ளே அரசியல் நுழைகிறது. இறுதியில், ஜீவாவின் காதல் ஜெயித்ததா? இல்லையா என்பதே கருவாக இருக்கும் என்று தெரிகிறது.

இடையில், போலீஸ் ஸ்டேசன், அரசியல் பிரவேசம், பிரச்சாரம், வன்முறை என்று கதை நகர்கிறது. ஒரு துப்பாக்கியால் ஒரு குரலை அடக்க நினைத்தால், ஓராயிரம் குரல் வெடிக்கும் என்று ஜீவா வசனம் பேசுகிறார்.

இறுதியில், பாடல் ஒலிக்கிறது. அதோடு டீசரும் முடிகிறது. இந்த டீசரைப் பார்த்தால் ஜாதி, அரசியல், காதல், வன்முறை போன்றவை இடம்பெற்றதாக தான் ஜிப்ஸி படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleMarch Bank Holiday List; மார்ச் மாதம் பேங்க் விடுமுறை 13 நாட்காளா?
Next articleINDvsNZ 2nd Test: இந்தியா 242 ரன்களுக்கு ஆல் அவுட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here