Home சினிமா கோலிவுட் Jyothika: பொன்மகள் வந்தாள் இசை வெளியீட்டு விழா ரத்து!

Jyothika: பொன்மகள் வந்தாள் இசை வெளியீட்டு விழா ரத்து!

370
0
Ponmagal Vandhal Audio Launch

Ponmagal Vandhal Audio Launch; பொன்மகள் வந்தாள் இசை வெளியீட்டு விழா ரத்து! ஜோதிகாவின் நடிப்பில் உருவாகி வரும் பொன்மகள் வந்தாள் படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொன்மகள் வந்தாள் இசை வெளியீட்டு (Ponmagal Vandhal Audio Launch) விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் படம் பொன்மகள் வந்தாள்.

பெண்களை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொன்மகள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு பெற்றது.

வரும் 27 ஆம் தேதி பொன்மகள் வந்தாள் படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவித்தபடி படம் திரைக்கு வருமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. காரணம், உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் (Corona Virus).

சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளில் கோரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஐடி நிறுவனங்கள், இன்ஜினியரிங் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக திரையரங்குகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த வாரம் திரைக்கு வரும் 10 படங்களின் ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தின் இசை வெளியீடு நடக்க இருந்தது. ஆனால், அது ரத்து செய்யப்பட்டுள்ளது.

எப்போது நடைபெறும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ராட்சசி படத்திற்காக சிறந்த நடிகைக்கான jfw movie awards 2020 விருது வழங்கப்பட்டது. அதில், ஜோதிகா சிலம்பம் சுற்றி ரசிகர்களை வியக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleதிருநெல்வேலியில் செல்போன் சுவிட்ச்ஆப்; கொரோனாவை பரப்பிய மலையாளி
Next articleகிரிக்கெட் ரிவைன்ட் : உலக கோப்பையை இலங்கை தொட்ட நாள் இன்று

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here