Home சினிமா கோலிவுட் எதிர்ப்புகளையும் தாண்டி டிஜிட்டலில் வெளியாகும் பொன்மகள் வந்தாள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

எதிர்ப்புகளையும் தாண்டி டிஜிட்டலில் வெளியாகும் பொன்மகள் வந்தாள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

312
0

Ponmagal Vandhal Release Date; ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் ரிலீஸ் தேதி அறிவிப்பு! ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்மகள் வந்தாள் வரும் 29 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஜே ஜே பெட்ரிக் இயக்கத்தில், சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் படம் பொன்மகள் வந்தாள். இப்படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பாண்டிரயராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா ஊரடங்கால், திரையரங்குகள் மூடப்பட்டு, படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.

இந்தப் படம் மட்டுமல்ல, விஜய்யின் மாஸ்டர் படம் உள்பட நிறைய படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

மேலும், சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்பட்டது.

இதன் காரணமாக, திரையில் வெளியிடாமல், சிறிய பட்ஜெட் படங்களை டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட படக்குழுவினர் பலரும் முடிவு செய்துள்ளனர்.

அந்த வரிசையில், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக அமேசான் பிரைமில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி வரும் 29 ஆம் தேதி ஜோதிகா நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பெண்மகளை மையப்படுத்திய பொன்மகள் வந்தாள் படம் வரும் 29 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Jyothika Ponmagal Vandhal

SOURCER SIVAKUMAR
Previous articleபுத்தக பிரியரான மாளவிகா மோகனன்: வைரலாகும் புத்தகம் வாசிக்கும் புகைப்படம்!
Next articleசிம்புவின் வருங்கால மனைவிக்காக காத்திருக்கிறோம்: பிந்து மாதவி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here