Home சினிமா கோலிவுட் இந்தியன் 2 மீண்டும் தொடங்கப்படும்: இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு நிறைவு!

இந்தியன் 2 மீண்டும் தொடங்கப்படும்: இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு நிறைவு!

317
0
Kamal Haasan Indian 2

Indian 2 Kamal Haasan; இந்தியன் 2 மீண்டும் தொடங்கப்படும்: இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு நிறைவு! இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் இதுவரை 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றும் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் 60 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என்று லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியன் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சதீஷ், மனோ பாலா ஆகியோர் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

பல கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

2017 ஆம் ஆண்டு இந்தியன்  2 படம் குறித்து அறிவிப்பு வெளியானது. ஆனால், கடந்தாண்டு தான் படப்பிடிப்பு தொடங்கியது. எனினும், கமல் ஹாசனுக்கு காலில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டது. இது ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த விபத்தில், உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதன ராவ் , ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர்.

காஜல் அகர்வால், கமல் ஹாசன், ஷங்கர் ஆகியோர் நூழிலையில் உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இப்படி வந்த அடுத்தடுத்த தடங்களால் படப்பிடிப்பு இனி நடக்க வாய்ப்பில்லை என்றும், படத்தையே கைவிட முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் லைகா நிறுவனம், கூறுகையில், இந்தியன் 2 படம் கைவிடப்படவில்லை.

இதுவரை 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் படம் குறித்து நல்ல அறிவிப்பு வெளிவரும் என்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleசென்னையை ஆக்கிரமித்த கொரோன வைரஸ் – இயல்பு நிலை திரும்புமா ?
Next articleஇந்தியாவில் கொரோனா தொற்று 56,342 ஐ தாண்டியது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here