புதுடெல்லி: 45 நாட்கள் கொரோனா ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று 56,342 ஐ தாண்டியது. கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1,886 ஆகவுள்ளது.
மராட்டியத்தில் மட்டும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 694 ஆக உள்ளது. ஜுன் ஜூலை மாதத்தில் தலைநகர் டெல்லி அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பை சந்தித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகள்
கடந்த இரண்டு நாட்களில் மும்பை, அகமதாபாத், சென்னை, தானே மற்றும் அரியலூர் ஆகிய பகுதிகளில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 5 பகுதிகளிலிருந்து மட்டும் மொத்த புதிய கொரோனா தொற்றில் 58% தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த இரு நாட்களில் தமிழ் நாட்டில் விழுப்புரம் மற்றும் திருவள்ளூர், மற்றும் மராட்டியத்தின் நாசிக் ஆகிய பகுதிகளிலும் அதிக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
வெளிநாட்டிலிருந்து மீட்பு விமானங்கள் இந்தியா வந்தன
வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களை மீட்க ‘வந்தே மாதரம்’ என்ற குழு அமைக்கப்பட்டபின், வியாழக்கிழமை முதல் விமானம் மாணவர்களை பங்களாதேஷில் இருந்து அழைத்துக்கொண்டு இந்தியாவின் ஸ்ரீநகரில் தரை இறங்கியது. அடுத்து ஏர் இந்தியா வின் மீட்புபணிக்கான விமானங்கள் 363 இந்திய குடிமக்களுடன் ஐக்கிய அரபு நாட்டிலிருந்து கொச்சி மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களுக்கு வியாழக்கிழமை வந்தடைந்தது.
உலக அளவில் மொத்தம் 38,15,561 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர் இதில் 2,67,469 இறந்தவர்கள் மற்றும் 12,66,479 நோய் தொற்றிலிருந்து விடுதலை ஆனவர்களும் அடங்குவர்.