அறிவும் அன்பும் பாடலை வெளியிட்ட கமல் ஹாசன்! நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக அறிவும் அன்பும் என்ற பாடலை கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார்.
அறிவும் அன்பும் என்ற கொரோனா விழிப்புணர்வு பாடலை கம ல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
நாட்டையே உலுக்கிய கொரோனா குறித்து பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்றும், வீட்டிலேயே இருக்கும்படியும் அறிவுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது கமல் ஹாசனும் கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அறிவும் அன்பும் என்று தொடங்கும் இந்தப் பாடலை கமல் ஹாசன் எழுதி, இயக்கி திரைப்பிரபலங்கள் பலருடன் இணைந்து பாடியுள்ளார்.
இந்தப் பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், சித்தார்த், முகென் ராவ், தேவி ஸ்ரீ பிரசாத், சித் ஸ்ரீராம், சங்கர் மகாதேவன், பாம்பே ஜெய ஸ்ரீ, யுவன் சங்கர் ராஜா, ஆண்ட்ரியா, லிடியன் என்று பலரும் பாடியுள்ளனர்.
தற்போது இந்த பாடலை கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார். இன்று வெளியிட்ட இந்த வீடியோவை இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.