Home சினிமா கோலிவுட் அப்பாவி குழந்தைய பலி கொடுத்த 2 மிருகங்கள்: கதறி அழுத கஸ்தூரி!

அப்பாவி குழந்தைய பலி கொடுத்த 2 மிருகங்கள்: கதறி அழுத கஸ்தூரி!

378
0
Child Jayashree Murder

Jayashree Murder Case; அப்பாவி குழந்தைய பலி கொடுத்த 2 மிருகங்கள்: கதறி அழுத கஸ்தூரி! விழுப்புரத்தில் சிறுமி ஜெயஸ்ரீ கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமியின் மரண வாக்குமூலம் கேட்ட நடிகை கஸ்தூரி கதறி அழுதுள்ளார்.

விழுப்புரத்தில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து நடிகை கஸ்தூரி கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

விழுப்புரத்தில் 14 வயது சிறுமி ஜெயஸ்ரீ பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2 நாட்களாகவே ஜெயஸ்ரீயின் மரணம் நம்மைவிட்ட அகலவில்லை. ஜெயஸ்ரீயின் மரண வாக்குமூலம் கூட இன்னமும் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டே இருக்கிறது.

உடல் முழுவதும் எரித்த நிலையிலும் கூட, தனது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி எரித்த 2 மிருகங்களின் பெயரை தெளிவாக கூறியுள்ளார். முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளது என்று காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், நடிகை கஸ்தூரி கதறி அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: குழந்தைங்க அது….இது போன்ற சம்பவத்தை நான் சினிமாவுல தான் பாத்துருக்கேன். ஆண்கள் மனது இப்படியா? சத்தியமா பெண்களுக்கு இப்படி செய்ய தோணுது…இவங்க ஆண்களே இல்லை…மனுஷங்களே இல்லை.

நம் நாட்டில் மிருகங்களுக்கு என்று தனி சட்டம் வேண்டும். மனுஷங்களுக்கு தரும் தண்டனையை இவங்களுக்கு தரக்கூடாது. முதலில் குடிபோதை….ஒருவேளை தெளிவாக இருந்திருந்தால் கொஞ்சமா ஈவு இரக்கம் இருந்திருக்குமான்னு தெரியல. மதுவை கொடுக்கிறதே அரசுதான். 2 நாள் திறந்தாங்க…ஊருல இருக்கிறவன் எல்லாம் மொத்தமா வாங்கி ஸ்டாக் வச்சுக்கிட்டான்.

அரசு தான் முதல் குற்றவாளி என்றால், இது போன்ற ஆட்கள் 2ஆவது குற்றவாளி..மிருகங்களோட மரபணுவையே அழிக்கணும்…அவன் கையாலேயே அவன் குடும்பத்தை கூண்டோடு அழிக்கணும். இது போன்ற ஆட்களுக்கு தரும் தண்டனையால் 4 தலைமுறைகள் யோசிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

SOURCER SIVAKUMAR
Previous articleமாட்டை காப்பாற்ற சென்ற பெண் மீது மின்சாரம் பாய்ந்து பலி: தஞ்சை
Next article15/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here