AjithKumar Fake Letter; அஜித் சமூக வலைதள பக்கங்களில் இணைவதாக அவரது கையெழுத்து உடன் கூடிய கடிதம் ஒன்று டிரெண்டானது. இதற்கு தற்போது வழக்கறிஞர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அஜித் Ajith Facebook நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. கடந்த சில தினங்களாக அஜித் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வந்தது. அஜித்தின் மகன் ஆத்விக் பிறந்தநாள், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 2ம் ஆண்டு நினைவு தின திதி நிகழ்வில் அஜித் கலந்து கொண்ட புகைப்படம், வீடியோ வெளியானது.
Valimai வலிமை படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலானது. இறுதியில், அஜித் நடிப்பில் வந்த காதல் மன்னன் திரைக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகியுள்ளது. இப்படி தொடர்ந்து அஜித் குறித்து தகவலும், அப்டேட்டும் வந்து கொண்டே இருந்த நிலையில், டுவிட்டரில் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்யும் செய்தியும் வெளியானது.
அதாவது, அஜித் சமூக வலைதளங்களில் Ajith Twitter Account இணையப்போவதாக கையெழுத்துடன் கூடிய கடிதம் ஒன்று வெளியானது.
ஆனால், அது போட்டோஷாப் செய்யப்பட்ட போலியான கடிதம் என்று தெரியவந்தது. இந்த நிலையில், தற்போது அஜித் சார்பில் அவரது சட்ட ஆலோசகர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
AjithKumar Fake Letter
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 6 ஆம் தேதி அஜித்குமார் வெளியிட்டதாக கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவது அவரது கவனத்திற்கு வந்துள்ளது.
அதில், சமூக ஊடகங்களில் மீண்டும் சேர முடிவு செய்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது போல் உள்ளது.
அந்த கடிதம் அஜித்குமாரால் AjithKumar வெளியிடப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் முற்றிலும் மறுக்கப்படுகின்றன என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கவே இந்த அறிவிப்பை வெளியிட விரும்புகிறார்.
கடந்த காலங்களில் அஜித் (Ajith Fake Letter) ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், தனக்கு எந்தவொரு சமூக ஊடகக் கணக்குகள் இல்லை என்றும், சமூக ஊடகங்களின் அதிகாரப்பூர்வ ரசிகர் பக்கத்தையும் கொண்டிருக்கவில்லை அல்லது ஆதரிக்கவில்லை என்றும் பலமுறை தெரிவித்திருந்தார்.
அதையே தற்போதும் வலியுறுத்த விரும்புகிறார்.
- அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகள் இல்லை.
- எந்தவொரு சமூக ஊடகங்களிலும் இணைய விரும்பவில்லை.
- சமூக ஊடகங்களின் எந்தவொரு கருத்தையும் மற்றும் எந்தவொரு ரசிகர் பக்கத்தையும் குழுவையும் அவர் ஆதரிக்கவில்லை.
- மீண்டும் சமூக ஊடகங்களில் சேரப்போவதாக கூறி வந்த இந்த போலி கடிதத்தை அவர் வெளியிடவில்லை.
கடைசியாக தவறான அறிவிப்பை வெளியிட்ட மற்றும் எங்கள் கட்சிக்காரரின் கையொப்பத்தை மோசடி செய்த குற்றவாளியை கண்டுபிடிப்பதற்குத் தேவையான மற்றும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகள் முடிந்தவரை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட விரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,
இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், அஜித் குறித்து வெளியான தவறான தகவலுக்கு அவர்கள் மிகவும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.