Home Latest News Tamil மாவொளி – இயற்கை மத்தாப்பு: இதுதான் ஒரிஜினல் தீபாவளி!

மாவொளி – இயற்கை மத்தாப்பு: இதுதான் ஒரிஜினல் தீபாவளி!

0
1020
மாவொளி தீபாவளி சுளுந்து மத்தாப்பு

மாவொளி, கார்த்திகை பை, சுளுந்து, கார்த்திகை ராட்டினம் இப்பெயர்கள் 90 கிட்ஸ் அறிந்திருக்கலாம், 20k கிட்ஸ்க்கு தெரியமா? இதுவே ஒரிஜினல் தீபாவளி!

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் ஒவ்வொன்றையும் உள்நோக்கி ஆராய்ந்தால் ஒவ்வொன்றும் அவர்களின் வாழ்வியலோடு தொடர்புடையதாக உள்ளது.

தமிழர்கள் ஒவ்வொரு மாதமும் ஒருவித திருவிழாக் கொண்டாட்டங்களை கொண்டுள்ளது. அப்படி ஒரு கொண்டாட்டம் தான் திருக்கார்த்திகை கொண்டாட்டம்.

தீபாவளி என்றால் என்ன? ஏன் கொண்டாடப்படுகிறது?

திருக்கார்த்திகை என்றால் என்ன?

கார்த்திகை மாதம் என்பது வானில் தோன்றும் நட்சத்திரத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட மாதம். கார்த்திகை மாதத்தில் இந்நட்சத்திரக் கூட்டத்தை அந்தி சாய்ந்தவுடன் பார்க்கலாம்.

அக்காலத்தில் ஒவ்வொரு மாதத்தின் ஒரு நாளையும், ஒரு நட்சத்திரத்தின் பெயர் கொண்டு அழைப்பார்கள். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் பிரசித்தி பெற்றதால் அது, மாதத்தின் பெயராக இடம் பெற்றது.

கார் என்றால் மேகம், மழை, இருளைக் குறிக்கும். திகை என்றால் திசையைக் குறிக்கும். இதனை ஒப்பிட்டு இதற்கு இப்பெயரை வைத்திருக்கலாம்.

இந்த நட்சத்திரக் கூட்டம் பார்ப்பதற்கு காதில் அணியும் மகரக்குண்டலம் போல் கட்சி அளிக்கும். இந்த மாதத்தில் தான் வையம் என்ற மேற்குத்தொடர்ச்சி மழையில் மழைப்பொழிவு ஏற்பட்டு வைகை (வையை) ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுமாம்.

(2019-ம் வருடம் தற்பொழுது வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலையில் தான் உள்ளது. இந்த தகவல் சங்ககால இலக்கியங்களில் இருந்து பெறப்பட்ட குறிப்புகளின் அடிப்படையில் உருவாக்கி உள்ளேன்.)

மாவொளி | கார்த்திகை ராட்டினம் | இயற்கை பட்டாசு

கார்த்திகை மாதத்தில் பனை மரத்தின் பூ (பாலக்கட்டை) எரிக்கப்பட்டு, அதன் கரியை நுணுக்கி ஒரு பையில் போட்டுத் தைப்பார்கள்.

தைக்கப்பட்ட பை மீது, சிறிது சாணம் பூசி காயவைத்து, பனை மட்டையை நான்காக கிழித்து அதன் இடுக்கில் வைத்துக் கட்டுவார்கள்.

அந்த மட்டையின் மேல் நுனியில் ஒரு கயிறைக் கட்டிக்கொண்டும், மறுநுனியில் உள்ள பொட்டணப் பை மேல் நெருப்பு கனுங்குகளை வைத்து சுற்றுவார்கள்.

அக்காலத்தில் உடம்பில் உடுத்திக்கொள்வதே கிழிந்த துணிகளைத்தான். அப்படி ஒரு சூழலில் சிறுவர்கள் இதற்குப் பை தயார் செய்வது என்பதே மிகவும் சவாலான செயல்.

பைகள் கிடைக்காதவர்கள் முத்திய பீர்க்கங்காய் குடிவையில் கரித்தூளை அடைத்து அதன் நுனியில் கயிறு கட்டி சுற்றுவார்கள்.

பார்ப்பதற்கு பலநூறு கம்பி மத்தாப்புகளை ஒன்று சேர்த்து சுற்றுவது போல் தீப்பொறி அவர்களைச்சுற்றி சுழன்று வரும்.

இதற்கு மாவொளி, சுளுந்து, கார்த்திகை பை என பல பெயர்கள் உள்ளது. இன்றும் சில ஊர்களில் இது புழக்கத்தில் உள்ளது. சில ஊர்களில் பாலகட்டைகளுக்குப் பதில் சைக்கிள் டயர்களை எரித்துச் சுற்றுச்சூழலை மாசு படுத்துகின்றனர்.

பல ஊர்களில் மாவொளியா அப்படின்னா என்ன? என்று கேட்கும் அளவிற்கு இக்காலத்து சிறுவர்களை பப்ஜி கேம் விளையாட வைத்தும், பெப்சி குளிர்பானம் குடிக்கவைத்தும் வளர்த்துள்ளனர்.

தீபாவளி என்ற ஒரு பண்டிகையைத் தமிழர்கள் கொண்டாடுவதற்கு முன்பே சுளுந்து என்ற மத்தாப்பை சுற்றி தீப ஒளித்திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், அது தெரியாத பலர் தீபாவளி பண்டிகைக்கு தமிழில் பெயர் வைத்துள்ளனர் என தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள் என பண்டிகையின் பெயரையே மாற்றிவிட்டனர்.

திருக்கார்த்திகை தீபம்

திருக் கார்த்திகை தீபம்ஒவ்வொரு ஊர்களில் இந்தப் பண்டிகைக்கு ஒவ்வொரு விதமான முக்கியத்துவம் உள்ளது. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் திருக்கார்த்திகை தீபம் இன்று வரை பிரசித்தி பெற்றதாக உள்ளது.

அதேபோன்று பல ஊர்களில் உள்ள கோவில்கள் முன்பு விறகுகளை கூம்புபோல் அடுக்கி வைத்து எரிப்பார்கள். விறகுகள் எரியும்போதே அதை எடுத்துக்கொண்டு வட்டம் அடிப்பார்கள்.

இந்த விறகு குச்சிகள் மூலம் காய்கறிப் பந்தல் வைத்தால் நன்கு விளைச்சல் வரும் என்று பலரும் நம்பி குச்சிகள் மூலம் பந்தல் காய்கறிகளை வளர்ப்பார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here