சென்னை: கொரோனா ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இருந்தாலும் ஆன்லைன் விற்பனை மற்றும் வீட்டிற்கே சென்று மதுவை வழங்க தடையில்லை எனவும் உத்தரவு பிறப்பித்தது.
நீதியரசர்கள் வினீத் கோதாரி மற்றும் புஷ்பா சத்யநாரயணா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு டாஸ்மாக் கடைகளை திறக்க நீதிமன்றம் பிறப்பித்த கட்டுபாடுகளை மீறியதால் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்ததாக தெரிகிறது.
பல்வேறு தரப்பினரும் மனுஅளித்தனர்
பல்வேறு மனுதாரர்களும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்ததால் எழுந்த சிக்கல்களை, ஊரடங்கு விதிமுறை மீறல்களை முறையீடு செய்ததை அடுத்து இந்த தீர்பை நீதியரசர்கள் வழங்கினார்கள்.
மே 4 இல், தமிழ் நாடு அரசு டாஸ்மாக் கடைகளை மே 7இல் திறக்க அரசாணை வெளியிட்டது அதில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடுமையான சமூக விலகல் கடைபிடித்தல் மற்றும் கூடுதல் பணியாளர்களுடன் இயங்கும் என அறிவித்திருந்தது .
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மே7 இல் திறக்கப்பட்ட போதிலும் கொரோனா கட்டுபாடுகள் தகுந்த முறையில் கடைபிடிக்க படாததால், கொரோனா பரவல் குறித்த அச்சம் அனைவரிடமும் ஏற்பட்டதை அடுத்து இந்த தீர்பை மக்கள் வரவேற்றுள்ளனர்.