Home சினிமா கோலிவுட் வாய்ப்பு கேட்ட மாளவிகா மோகனனுக்கு கிடச்ச லக்!

வாய்ப்பு கேட்ட மாளவிகா மோகனனுக்கு கிடச்ச லக்!

555
0
Malavika Mohanan Join With Dhanush

Malavika Mohanan D43 Movie; வாய்ப்பு கேட்ட மாளவிகா மோகனனுக்கு கிடச்ச லக்! தனுஷிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வாய்ப்பு கேட்ட நடிகை மாளவிகா மோகனுக்கு அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். பேட்ட படத்தின் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி நடிகர் தனுஷ் தனது 37ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்.

அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தனது டுவிட்டரில், பிறந்தநாள் வாழ்த்துகள் தனுஷ். வரும் வருடம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கட்டும். உங்களுடன் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன்.

யாராவது நம் இருவரையும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க வைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த தனுஷ், நன்றி, விரைவில் அது நடக்கும் என்று நினைக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் D43 படத்தில் மாளவிகா மோகனனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படம் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கர்ணன் படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில், கர்ணன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅன்பு ஒன்றுதான் உலகினில் உண்மை: லதா ரஜினிகாந்த் பாடிய பாடல்!
Next articleAnnatheSethi First Single: துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here