Home நிகழ்வுகள் 19-வது ஓவரில் சஹாரிடம் அப்படி தோனி என்னதான் கூறினார்: மால்தி சஹாரின் பதில்

19-வது ஓவரில் சஹாரிடம் அப்படி தோனி என்னதான் கூறினார்: மால்தி சஹாரின் பதில்

7027
0

19-வது ஓவரில் சஹாரிடம் அப்படி தோனி என்னதான் கூறினார்: மல்தி சஹாரின் பதில்

சென்னை அணி கடந்த சனிக்கிழமை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில், 22 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.

கடைசி இரண்டு ஓவர்களில் 39 ரன் தேவைப் படுகின்ற நிலைமையில் சென்னை அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பிராவோ இல்லாத நிலையில் தீபக் சஹார் பந்து வீச வந்தார்.

பெரும்பாலும், முதல் 10 ஓவர்களுக்குள்ளே தீபக் சஹாரை அவரது 4 ஓவர்களையும் வீச வைத்துவிடுவார் தோனி .

12 பந்துகளில் 39 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில், ஸ்லோ பால் போட முயன்று, முதல் இரண்டு பந்துகளிலும் பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேல் ஃபுல்டாஸாக நோ பால் போட்டார்.

பந்து எதுவும் இல்லாமல் 8 ரன்களை கொடுத்து விட்டார். இதனால் பொறுமை இழந்த கேப்டன் கூல் தோனி சஹாரிடம் சிறிது நேரம் உரையாடினார்.

பிறகு பந்து வீசிய சஹார் வெறும் 6 ரன்களில் பந்து வீசி மில்லர் விக்கெட்டையும் எடுத்தார். அப்படி என்னதான் தோனி சஹாரிடம் கூறினார் என்பது ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்தக் கேள்வியை ஒரு ரசிகர் தீபக் சாஹரின் சகோதரியான மால்தி சஹாரிடம் இன்ஸ்டாகிராமில் கேட்டுள்ளார்.

அதற்கு மால்தி, “அவர், அதை என்கிட்டையே சொல்ல மாட்டேங்குறாருபா, தெரிஞ்சிக்காம என் தலையும் வெடிச்சிரும்போலதான் இருக்கு” என ஜாலியாகப் பதில் அளித்திருக்கிறார்.

சென்னை சூப்பர்கிங்ஸ் ஆடும் ஆட்டங்களைப் பார்க்க வரும் இவர், ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபெங்களூர் அணி தொடர்ந்து 6வது தோல்வி: கன்னித்தீவு கதையைப் போல இதுக்கு ஒரு முடிவே இல்லையா?
Next articleவேற லெவல் அர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமேக்கின் டீசர்: கபீர் சிங்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here