Home சினிமா கோலிவுட் விஜய் எங்கவீட்டு சொத்து, சமுதாயத்தின் முத்து!

விஜய் எங்கவீட்டு சொத்து, சமுதாயத்தின் முத்து!

447
0
Master Producer Xavier Britto

Master Producer Xavier Britto; விஜய் எங்கவீட்டு சொத்து, சமுதாயத்தின் முத்து! விஜய் எங்கள் வீட்டு சொத்து என்று தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு (Master Audio Launch) விழா சென்னை லீலா பேலஸ் (Leela Palace) ஹோட்டலில் நடந்து வருகிறது.

மாஸ்டர் படக்குழுவினருடன் இணைந்து ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ கூறுகையில், விஜய் தான் எங்கள் வீட்டு சொத்து.

அவர் தான் சமுதாயத்தின் முத்து. கடினமான சண்டைக்காட்சியைக் கூட மிகவும் எளிமையாக செய்து முடிக்கிறார்.

அம்மா, அப்பா மீது அதிக பாசம் வைத்தவர். அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம், இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம், பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம் என்று கூறினார்.

மேலும், அது போல தன்னை மட்டுமே நினைப்பவன் மிருகம், குடும்பத்தை நினைப்பவன் மனிதம். ஆனால், சமுதாயத்தை நினைப்பவன் தான் தலைவனாகிறான். விஜய் ஒரு தலைவன்.

ஒருவரிடம் இருந்து நடை, உடை, பாவணை என்று எல்லாவற்றையும் காப்பியடிக்கலாம். ஆனால், அவரது பேஷனை மட்டுமே யாராலும் காப்பியடிக்க முடியாது. விஜய் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார்.

அவரது அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்துவிட்டு, நான் திரும்ப வருகிறேன். அப்போது விஜய்யும் பின்னாடியே வந்தார். நான் புறப்படும் வரை கீழேயே இருந்தார். இது அவரது மரியாதையை காட்டுகிறது.

தேனீக்களிடமிருந்து தேனை திருடிக்கொண்டு செல்லும் போது தேனி சொல்லுமாம், தேனை மட்டுமே அவர்களால் திருட முடியும், ஆனால், அந்த மேக்கிங் ஸ்டைலை யாராலும் திருட முடியாது என்று சொல்லுமாம்.

இப்படியெல்லாம் பேசிய அவர் ஏசு சபையைச் சேர்ந்தவர்களுக்கும், தன்னை இதுவரை கொண்டு வந்த பாதிரியார்களுக்கும் நன்றி என்றார்.

மேலும், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், தனது குடும்பத்தினருக்கும், மாஸ்டர் படக்குழுவினருக்கும், தனது குழுமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி என்று கூறினார்.

SOURCER SIVAKUMAR
Previous articleரெய்டு போக வேண்டாம்: வருமான வரித்துறையினரை எச்சரித்த தீனா!
Next articleசாமிக்காக சண்டை போடுறாங்க கூட பழக வேண்டாம்: விஜய் சேதுபதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here