மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் வாத்தி லிரிக் வீடியோ (Vaathi Lyric Video) வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வாத்தி லிரிக் வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர் (Master). கல்வித்துறையில் நடக்கும் ஊழல் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். கார்த்தியின் கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இவரது இசையில், சமீபத்தில் மாஸ்டர் முதல் சிங்கிள் டிராக் குட்டி ஸ்டோரி பாடல் லிரிக் வீடியோ வெளியானது.
உலகம் முழுவதும் குட்டி ஸ்டோரி பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
வாழ்க்கையில், நடக்கும் உண்மையை மையப்படுத்தி இப்பாடல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
குட்டி ஸ்டோரி பாடலைத் தொடர்ந்து மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் வாத்தி லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
வாத்தி லிரிக் வீடியோ (Vaathi Lyric Video)
வாத்தி கம்மிங் ஒத்து என்று இந்தப் பாடல் தொடங்குகிறது. அண்ணன் வந்தா ஆட்டம் பாம் டும்மு… பிளு பிளு பிளு பிளாம்மி….என்று வாத்தி பாடல் வரிகள் அமைந்துள்ளது.
இந்தப் பாடலின் போது விஜய், மாணவர்கள் ஆகியோர் நடனம் ஆடுகின்றனர். இவர்களுடன் இணைந்து கானா பாலசந்தர் மற்றும் அனிருத் ஆகியோரும் டான்ஸ் ஆடுகின்றனர்.
மாணவர்களுக்கும், வாத்திக்கும் இடையில் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்தி இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.
வாத்தி பாடலுக்கு கானா பாலசந்தர் பாடல் வரிகள் அமைத்துள்ளார். கானா பாலசந்தர் மற்றும் அனிருத் ஆகியோர் இந்தப் பாடலை பாடியுள்ளனர்.
இதற்கு முன்னதாக கமல் ஹாசன் நடிப்பில் வந்த நமம்வர் படத்தில் இடம்பெற்றுள்ள எதிலேயும் வல்லவன் டா என்ற பாடலின் உல்டா போன்று இந்தப் பாடல் இருக்கும் என்று தோன்றுகிறது.
மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போதே இப்படம் கமல் ஹாசன் நடித்த நம்மவர் படத்தின் ரீமேக் என்று தகவல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் குறித்து அப்டேட் வருவது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.
மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் வெளியான பிறகு மாஸ்டர் டிரைலர் குறித்து அப்டேட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மாஸ்டர் இசை வெளியீட்டு விழா வரும் 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்க இருக்கிறது என்றும், சன் டிவி நிறுவனம் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை நேரலை செய்கிறது என்றும் அறிவிக்கப்பட்டது.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசுவதை காண்பதற்கும், கேட்பதற்கும் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை இப்போதிலிருந்தே தயாராகி வருகின்றனர்.
தற்போது விஜய் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இன்னும், 5 நாட்கள் உள்ள நிலையில், அவர் அதற்குள்ளாக சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்டர் படம் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதற்கு முன்னதாக வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, விஜய், தளபதி65 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்க இருப்பதாக கூறப்பட்டது.
எனினும் இது குறித்து அதிகார்ப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.