Vaathi Coming 60M Views; ஆரவாரத்தோடு வந்து தெறிக்கவிட்ட வாத்தி கம்மிங்: யூடியூப்பில் 60 மில்லியன் வியூஸ்! தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் யூடியூப்பில் 60 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.
வாத்தி கம்மிங் பாடல் 60 மில்லியன் வியூஸ் வரை யூடியூப்பில் பெற்றுள்ளது. இன்னும் 3 மில்லியன் வியூஸ் பெற்றால் குட்டி ஸ்டோரியின் 63 மில்லியன் வியூஸ் சாதனையை முறியடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
மேலும், சாந்தனு, சஞ்சீவ், ஆண்ட்ரியா, பிரேம், நாசர், பிரிகிதா, கௌரி கிஷான், அர்ஜூன் தாஸ் ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.
விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
இளம் இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் எளிமையான முறையில் நடந்தது.
இதைத் தொடர்ந்து மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவித்தபடி வெளியாகவில்லை.
இதே போன்று கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், கொரோனா காரணமாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. மேலும், அனைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.
மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில், மாஸ்டர் குட்டி ஸ்டோரி பாடல் யூடியூப்பில் 63 மில்லியன் வியூஸ் பெற்றது.
இந்த நிலையில், தற்போது வாத்தி கம்மிங் பாடல் யூடியூப்பில் 60 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.
இன்னும் 3 மில்லியன் வியூஸ் பெற்றால், குட்டி ஸ்டோரி பாடலின் சாதனையை முறியடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாத்தி கம்மிங் 60 மில்லியன் வியூஸ் பெற்றதைத் தொடர்ந்து, டுவிட்டரில் Vaathi Coming என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
வாத்தி கம்மிங் பாடலுக்கு அனைவரும் டான்ஸ் ஆடிய வீடியோவை வாத்தி கம்மிங் சேலஞ்ச் என்ற ஹேஷ்டேக்கில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், அண்மையில், மாஸ்டர் பாடலின் கரோக்கி வெர்ஷன் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.