Master Vaathi Coming; மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் #VaathiStepu என்ற ஹேஷ்டேக்குடன் வாத்தி கம்மிங் ஒத்து பாடலுக்கு தான் போடும் மோசமான ஸ்டெப்பை போட்டு சேலஞ்ச் ஒன்றை தொடங்கி வைத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர் (Master Release Date). வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி பிரமாண்டமாக திரைக்கு வருகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா (Master Audio Launch) வரும் 15 ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு நடக்க இருக்கிறது. மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை சன் டிவி தங்களது தொலைக்காட்சியில் நேரலை செய்கிறது.
சமீபத்தில் மாஸ்டர் படத்தின் இரண்டாவது சிங்கிள் (Master Second Single) வாத்தி கம்மிங் ஒத்து (VaathiComing) பாடல் டிராக் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
அனிருத் இசையில், கானா பாலசந்தர் அந்த பாடலை பாடியுள்ளார். மேலும், இருவரும் இணைந்து வாத்தி கம்மிங் ஒத்து பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளனர்.
இந்த நிலையில், அனிருத் தனது டுவிட்டரில், 3 மோசமான டான்ஸர்ஸ் வாத்திஸ்டெப் சேலஞ்ச் (Vaathi Stepu challenge) என்று கூறி பாடலில் தாங்கள் ஆடிய அந்த டான்ஸ் வீடியோவை போட்டு நடனம் ஆடியுள்ளார்.
அதே போன்று நடிகர் சாந்தனு தனது மனைவியுடன் இணைந்து வாத்திஸ்டெப்பு சேலஞ்ச் டான்ஸ் ஆடிய வீடியோவை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சினிமா பிரபலங்கள் பலரும் வாத்திஸ்டெப்பு சேலஞ்ச் செய்து வீடியோ பதிவிட்டு வருகின்றனர். #VaathiStepuchallenge என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
மேலும், டான்ஸ் ஆடிய வீடியோவை பதிவிட்டு பலரும் மாஸ்டர் படத்தின் மீது தங்களுக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால், இந்த டான்ஸ் ஸ்டெப் ஜெய் மற்றும் அஞ்சலி ஆகியோரது நடிப்பில் வந்த மாசமா என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது.
பாடலின் காப்பி என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், அந்தப் பாடலுக்கு ஸ்லோவாக நடனம் ஆடப்பட்டிருக்கும்.
மாஸ்டர் பாடலுக்கு வேகமாக நடனம் வரும் அவ்வளவு தான் வித்தியாசம். இதுக்கு அப்புறம் சொல்லுதற்கு ஒன்னும் இல்ல….
அதே போன்று வாத்தி பாடலின் மியூசிக் அனிருத் இசையில் அஜித் நடிப்பில் வெளிவந்த ஆலுமா டோலுமா பாடலை போன்று இருக்கிறது என்று சர்ச்சை எழுந்து உள்ளது.