Home சினிமா கோலிவுட் விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பிய நவாசுதீன் சித்திக் மனைவி: 11 வருட திருமண வாழ்க்கைக்கு முடிவு?

விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பிய நவாசுதீன் சித்திக் மனைவி: 11 வருட திருமண வாழ்க்கைக்கு முடிவு?

265
0
Nawazuddin Siddiqui Wife Divorce

Nawazuddin Siddiqui Wife; விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்த நவாசுதீன் சித்திக் மனைவி: 11 வருட திருமண வாழ்க்கைக்கு முடிவு? பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஆலியா சித்திக் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர், ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு நவாசுதீன் சித்திக்கிற்கும், ஆலியா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஷோரா சித்திக் என்ற ஒரு மகளும், யானி சித்திக் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர்.

இந்த நிலையில், திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில், தனக்கு விவாகரத்து கோரி ஆலியா சித்திக் சட்ட ரீதியாக விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது குறித்து ஆலியாவின் வழக்கறிஞர் அபே ஷஹாய் கூறுகையில், கடந்த 7 ஆம் தேதி முதல் முறையாக விவாகரத்து வேண்டி சட்ட ரீதியாக நவாசுதீன் சித்திக்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆம், இமெயில் மற்றும் வாட்ஸ் அப் மூலம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு 15 நாட்களுக்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆம், சில சமயங்களில் இது போன்ற தொழில்நுட்பம் வாயிலாகவும் நோட்டீஸ் அனுப்பலாம். ஆனால், அந்த நோட்டீஸ்க்கு நவாசுதீன் சித்திக் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து, மீண்டும் 13 ஆம் தேதி இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு 15 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

அதற்கும் அவர் அமைதி காத்து வந்துள்ளார். இதையடுத்து, இனி நடிகர் நவாசுதீன் சித்திக் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலியாவின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

மேலும், இந்த லாக்டவுன் காரணமாக அதிக துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 2 குழந்தைகளையும் தனியாக கவனித்து வருகிறார். விவாகரத்திற்கு பிறகு குழந்தைகளை அவரது பொறுப்பில் வளர்க்க ஆசைப்படுகிறார்.

ஆலியாவின் விவாகரத்து பிரச்சனைக்கு நவாசுதீன் சித்திக்கின் சகோதரர் ஷாமாஸும் ஒரு காரணம்.

ஆம், நோட்டீஸில் கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவற்றை என்னால் வெளியிட முடியாது.

இந்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த பிறகு தான் என்ன காரணம் என்று கூற முடியும்.

இதையடுத்து ஆலியா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அஞ்சனா கிஷோர் பாண்டே என்ற அடையாளத்துடன் வாழ விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனது நலனுக்காக ஒருவரது அடையாளத்தை பயன்படுத்த நான் விரும்பவில்லை. எதிர்காலத்தைப் பற்றி அதிகம் யோசிக்கவும் இல்லை, இந்த திருமணத்தை இனி நான் விரும்பவும் இல்லை.

நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகள் இல்லை என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleஇடுப்பு சர்ச்சைக்கு பேர் போன குஷி படம்: 20YearsOfKushi!
Next articleதயாரிப்பாளர் அவதாரம் எடுத்ததால் நடிப்பு முழுக்கு போட்ட சார்மி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here