Home சினிமா கோலிவுட் HBD Thalapathy Vijay: NonPareilThalaAJITH நம்பர் ஒன் இடத்தில் தல அஜித்!

HBD Thalapathy Vijay: NonPareilThalaAJITH நம்பர் ஒன் இடத்தில் தல அஜித்!

460
0
Thala Ajith Twitter Trending

Thalapathy Vijay; விஜய் பிறந்தநாள்: நம்பர் ஒன் இடத்தில் தல அஜித்! விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டர் ஹேஷ்டேக்கில் தல அஜித்தின் பெயரை இடம்பெறச் செய்து ரசிகர்கள் டிரெண்டாக்கியுள்ளனர்.

விஜய் பிறந்தநாளில் தல அஜித்தின் ஹேஷ்டேக் டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

கோலிவுட் ரசிகர்களுக்கு இடையில் கடும் போட்டியாக நினைப்பவர்கள் தல, தளபதி ரசிகர்கள் தான். ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதும் காலங்காலமாக நடந்து வருகிறது. அஜித் படம் திரைக்கு வந்தால் விஜய் ரசிகர்கள் விமர்சிப்பதும், விஜய் படமோ, பாடலோ, டீசர், டிரைலரோ வந்தால் அஜித் ரசிகர்கள் விமர்சிப்பதும் நடந்து வருகிறது.

ஆனால், விஜய்யோ, அஜித்தோ யாரும், அவர்களுக்குள் போட்டியாகவோ, எதிரியாகவோ நினைத்தது இல்லை. நினைப்பதும் இல்லை. இருவரும் ஒருவருக்கொருவர் நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இவ்வளவு ஏன், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நண்பர் அஜித்தைப் போன்று உடை அணிந்து வர வேண்டும் என்பதற்காக தான் கோட் சூட்டில் வந்ததாக விஜய் தெரிவித்தார். இதன் காரணமாக அப்போது நண்பர் அஜித் என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டானது.

இந்த நிலையில், வழக்கம் போல் இன்று அஜித் ரசிகர்கள் தங்களது வேலையை காட்டியுள்ளனர். ஆம், தளபதி விஜய் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு டுவிட்டரிலும், ஹலோவிலும் நிறைய ஹேஷ்டேக்குகள் டிரெண்டானது.

ஆனால், அதனையெல்லாம் முறியடிக்கும் வகையில், டுவிட்டர் டிரெண்டிங்கில் NonPareilThalaAJITH என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளது. HappyBirthdayThalapathyVijay என்ற ஹேஷ்டேக் 5ஆவது இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Thala Ajith

Previous articleகுட்டி நயன் குட்டி விக்கி: டிரெண்டாகும் ஹலோ ஹேஷ்டேக்!
Next articleகுட்டி ஸ்டோரி வீடியோ: விஜய் பிறந்தநாளுக்கு கீர்த்தியின் வயலின் வாழ்த்து!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here