Vijay Sethupathi; உன் மாஸ்டர் பிளான் தான் என்ன? விஜய் சேதுபதியிடம் கேட்ட பார்த்திபன்! துக்ளக் தர்பார் படத்தின் புகைப்படத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்து நடிகர் பார்த்திபன், உன் மாஸ்டர் பிளான் தான் என்ன என்று விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
துக்ளக் தர்பார் படத்தின் விஜய் சேதுபதி அரசியல் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில், மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, புஷ்பா, யாதும் ஊரே யாவரும் கேளிர், க/பெ.ரணசிங்கம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
கோவிந்த வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார். மேலும், பார்த்திபன் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், விஜய் சேதுபதி இருவிதமான சட்டை அணிந்து அமர்ந்திருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.
அதில் ஒன்று தலைகீழாக தெரிகிறது. மேலும், விஜய் சேதுபதியின் தலைக்கு மேலே பட்டாம் பூச்சி பறப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது.
இதுஒருபுறம் இருக்க, துக்ளக் தர்பார் படத்தின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், விஜய் சேதுபதி உடன் தான் இருக்கும் புகைப்படத்தை நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது: பார்த்திபன்:நானும் ரவுடிதான்,நீயும் ரவுடிதான்.இன்னைக்கு உன் துக்luck தர்பார் எவ்வளவு பெரிய Level-ல இருக்குன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுகிட்டு”இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா”ங்கிற Range-க்கு பவ்யமா கையை கட்டிகிட்டு நின்னா என்ன அர்த்தம்?
உன் MASTER plan தான் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.