புதுடெல்லி: மத்திய அரசு மற்றும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்(CBSE) ஆகியவை, 10ஆம் வகுப்பு மாணவர்கள் மீதம் இருக்கும் தேர்வுகளை எழுத தேவையில்லை மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மீதி தேர்வுகளை எழுதலாம் அல்லது முன்னர் எழுதிய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்களை பெறலாம் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தன.
கொரோனா பரவல் இருப்பதால் தேர்வுகள் இரத்து
ஜீலை 1இல் இருந்து நடத்தவிருந்த தேர்வுகளை, கொரோனா பரவல் இருப்பதால் இரத்து செய்துள்ள அறிவிப்பை நாளை வெளியிட இருப்பதாக நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்(CBSE) தெரிவித்துள்ளது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத வாய்ப்பு
விடுபட்ட தேர்வுகளை எழுதுவதற்கான வாய்ப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
நிலைமை சீரான பிறகு 12ஆம் வகுப்பு தேர்வுகள்
மேலும் கொரோனா நிலைமை சீரான பிறகு 12ஆம் வகுப்பு தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் எனவும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு வர விருப்பம் இல்லாத மாணவர்களின் பெயர் பட்டியல் ஜூலை 12 இல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாநிலங்களில் பள்ளிகள் கொரோனா தனிமைப்படுத்துதல் மையங்களாக செயல்பட்டு வரும் நிலையில் அம்மாநில அரசுகள் தேர்வுகளை நடத்த முடியாமல் இருக்கின்றன.