Home சினிமா “பொன்மகள் வந்தாள்” – ஒரு பார்வை

“பொன்மகள் வந்தாள்” – ஒரு பார்வை

447
0

பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, பல எதிர்ப்புகளை தாண்டி நேற்று amazon prime இல் நேரடியாக release செய்யப்பட்டுள்ளது.

“பொன்மகள் வந்தாள்” ஜே.ஜே பிரெட்ரிக் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 2D entertainment தயாரிப்பில் amazon prime இல் நேரடியாக release செய்யப்பட்டுள்ளது.

ஜோதிகா, கே.பாக்யராஜ், ர.பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன், பிரதாப் போதென், வித்யா பிரதீப் என பலர் நடிப்பில் ஜே.ஜே பிரெட்ரிக் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

“பொன்மகள் வந்தாள்” திரைக்கதை சுருக்கம் :

ஊட்டியில் தன மகள் வெண்பா (jyotika) வுடன் வசித்துவருகிறார் பெட்டிஷன் பெத்துராஜ் (கே.பாக்கியராஜ்). எதற்க்கெடுத்தாலும் பெட்டிஷன் போடுவதால் இந்த பெயர் இவருக்கு.

சிறிய விஷயங்களுக்கு கூட பெட்டிஷன் போட்டு அதை தனக்கு துணையாக இருக்கும் வக்கீலுடன் சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்காக்கி ஜெயிக்கின்றனர்.

இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு முடித்துவைக்கப்பட்ட சைக்கோ ஜோதி வழக்கை மீண்டும் ஊட்டியில் துவக்க தன மகள் வெண்பாவுடன் சென்னை நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வழக்கை துவங்குகின்றனர்.

நான்கு பெண் குழந்தைகளை கடத்தி கொடூரமாக கொன்றதால் பொலிஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட சைக்கோ ஜோதி வழக்கை எடுத்து வாதிட பெத்துராஜின் மகள் வெண்பா களமிறங்குகிறார்.

கொடூரமாக கொலைசெய்யப்பட்ட குழந்தைகளின் பெற்றோர், ஊர்மக்கள், மாதர் சங்கத்தினர் அனைவரின் எதிர்ப்பையும் மீறி வெண்பா நீதிமன்றத்தில் வழக்கை துவங்குகிறார்.

இந்த வழக்கில், பெரும்புள்ளியான வரதராஜன் (தியாகராஜன்) மற்றும் அவரது வழக்கறிஞர் ரத்தினராஜ் (ரா.பார்த்திபன்) சார்பில் எழும் எதிர்ப்புகளை தாண்டி எப்படி ஜெயிக்கிறார் என்பதுதான் திரைக்கதை.

வெண்பா ஏன் 15 வருடங்கள் கழித்து இந்த வழக்கை மீளதுவக்க வேண்டும்? வரதராஜனுக்கும் இந்த வழக்கிற்கும் என்ன சம்மந்தம்? வெண்பா உண்மையில் யார்? இறுதியில் வெண்பா இந்த வழக்கை ஜெயித்தாரா?

இதற்கான விடைகளை காண முழு திரைப்படத்தையும் amazon prime இல் காணுங்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் “பொன்மகள் வந்தாள்” திரைப்படம் முடிக்கப்பட்டு திரைக்கு வர தயாரானது. திரையரங்குகளில் release செய்யமுடியாத சூழல் இருந்துவந்தது.

எனவே இத்திரைப்படத்தை டிஜிட்டலில் amazon prime தளத்தில் வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன.

எல்லா எதிர்ப்புகளையும் தாண்டி நேற்று இத்திரைப்படம் amazon prime இல் வெளியானது.

Previous articleடெல்லியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
Next articleஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கே.எஸ்.ரவிக்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here