Home சினிமா கோலிவுட் நான் கைது செய்யப்பட்டேனா? அன்று மட்டும் 3 படம் பார்த்தேன்: பூனம் பாண்டே விளக்கம்!

நான் கைது செய்யப்பட்டேனா? அன்று மட்டும் 3 படம் பார்த்தேன்: பூனம் பாண்டே விளக்கம்!

1365
0
Poonam Pandey Explanation

Poonam Pandey; நான் கைது செய்யப்பட்டேனா? அன்று மட்டும் 3 படம் பார்த்தேன்: பூனம் பாண்டே விளக்கம்! தான் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்றும், அன்று மட்டும் 3 படம் பார்த்ததாகவும் நடிகை பூனம் பாண்டே விளக்கம் கொடுத்துள்ளார்.

ஊரங்கி மீறி வெளியில் சுற்றியதற்காக தன்னை கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று நடிகை பூனம் பாண்டே விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. வரும் 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை ஏற்கனவே மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மேலும், ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் புதிய விதிமுறைகள் குறித்து வரும் 18 ஆம் தேதி முன்னதாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது. அதன்படி, ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், சர்ச்சைக்கு பேர் போன நடிகை பூனம் பாண்டேவை போலீசார் கைது செய்துள்ளனர் என்று செய்தி வெளியானது.

ஆம், அவரைத் தான் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன், தனது ஆண் நண்பர் ஷாம் அகமது என்பவருடன் மும்பை மெரைன் டிரைவ் பகுதியில் காரில் சுற்றித் திரிந்துள்ளார்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மும்பை போலீசார் எந்தவித காரணமும் இல்லாமல் காரில் சுற்றித்திரிந்த பூனம் பாண்டே மற்றும் அவரது நண்பரை கைது செய்துள்ளனர். அதன் பிறகு எச்சரித்து அவர்களை விடுவித்துள்ளனர்.

ஆனால், காரை மட்டும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பூனம் பாண்டே மற்றும் அவரது நண்பர் மீது சட்டத்தை மதிக்காது, ஊரடங்கினை மீறி நோய் பரப்பும் நோக்கத்துடன் வெளியில் சுற்றித்திரிந்தது,

பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று செய்தி வெளியானது.

ஆனால், தன்னை யாரும் கைது செய்யவில்லை என்று பூனம் பாண்டே விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் அன்றிரவு 3 படங்கள் பார்த்தேன். மிகவும் சிறப்பான படங்கள். என்னை கைது செய்ததாக வெளியில் செய்தியில் உண்மை இல்லை.

தொடர்ந்து நான் கைது செய்யப்பட்டது குறித்து விசாரிப்பதற்காக தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த செய்தியை நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

இது குறித்து யாரும் செய்தி வெளியிட வேண்டாம். நான் வீட்டில் தான் இருக்கிறேன். நலமாக இருக்கிறேன் என்று வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleசமையல் கலை வல்லுநராகும் சிம்பு: லாக்டவுனில் விதவிதமான சாப்பாடு!
Next articleவாடகைத்தாய், பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் சன்னி லியோன் பர்த்டே டுடே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here