Home சினிமா கோலிவுட் எதுக்குன்னே தெரியாம டிரெண்டாகும் #Pray_For_samuthirakani: யாரு பாத்த வேல?

எதுக்குன்னே தெரியாம டிரெண்டாகும் #Pray_For_samuthirakani: யாரு பாத்த வேல?

1670
0
Samuthirakani Memes

எதுக்குன்னே தெரியாம டிரெண்டாகும் #Pray_For_samuthirakani: யாரு பாத்த வேல? டுவிட்டரில், இன்று ஏதேனும் முக்கியமான நிகழ்வு நடந்தலோ, படம் ரிலீஸ் ஆனாலோ அது டிரெண்டாகும். ஆனால், இங்கு #Pray_For_samuthirakani என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

என்ன காரணம் என்றே தெரியாம, #Pray_For_samuthirakani என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தரமான இயக்குநர்களில் சமுத்திரக்கனியும் ஒருவர். வெங்கட் பிரபு, எஸ்பிபி சரண், மீரா வாசுதேவன் ஆகியோரது நடிப்பில் 2003 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சூப்பர் ஹிட் படம் உன்னை சரணடைந்தேன்.

இப்படத்தின் மூலமே சமுத்திரக்கனி தன்னை ஒரு இயக்குநராக அறிமுகம் செய்தார்.

இவ்வளவு ஏன், விஜயகாந்த் நடிப்பில் வந்த நெறஞ்ச மனசு என்ற படத்தை இவர் தான் இயக்கியுள்ளார்.

சசிகுமாருக்கு படத்திற்கு பேர் கொடுத்த நாடோடிகள் படத்தையும் இவரே இயக்கியுள்ளார்.

மேலும், நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன், நாடோடிகள் 2, கிட்னா என்று வரிசையாக பல படங்களில் இயக்கியுள்ளார்.

ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் திகழ்ந்துள்ளார்.

எப்போதும் சமூகத்தின் மீதும், பெண்கள் மீதும் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ள சமுத்திரக்கனி சமூக அக்கறையை மையப்படுத்திய படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். இது போன்ற படங்களையே இயக்கியுள்ளார்.

அண்ணி, அரசி என்று டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். பின்னணி பாடகராகவும், டப்பிங் ஆர்டிஸ்டாகவும் இருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக டுவிட்டரில் இவரது பெயர் தான் அடிபட்டு வருகிறது. ஆம், இவரை வைத்துதான் ஏகப்பட்ட மீம்ஸ்கள்.

டுவிட்டரில் #Pray_For_samuthirakani என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

சமுத்திர கோணி, சமுத்திரராஜா, சமுத்திர ஆணி, சமுத்திர வாணி சமுத்திர ராணி, சமுத்திர_கன்னி, சமுத்திர ட்ரம்ப், சமுத்திரகனி, சமுத்திரகாய், சமுத்திரபிஞ்சு என்றெல்லாம் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால், இதையெல்லாம் அவர் பார்த்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவார்.

காரணமே இல்லாமல், ஏன் இப்படியெல்லாம் மீம்ஸ் உருவாக்கி அதனை டிரெண்டாக்கி வருகின்றனர் என்று இன்னும் நிறைய பேருக்கு தெரியாது. ஏன் அவருக்கே கூட  தெரியாது. உதாரணத்திற்கு ஒரு படத்தில் வடிவேலுவை அடிக்கும் போது காரணத்தைச் சொல்லிட்டு அடிங்கடா என்று கூறுவாறல்லவா. அது போன்று தற்போது சமுத்திரக்கனிக்கு நேர்ந்துள்ளது.

என்ன காரணம், ஏன் ட்ரோல் செய்யப்படுகிறார் என்பதற்கான காரணத்தை மட்டும் சொல்லிவிட்டு இது போன்று செய்யுங்கள் என்று கெஞ்சும் நிலை கூட வரும்.

அண்மையில், வெளியான எட்டுத்திக்கும் பற படத்தில், சாதி மறுப்பு திருமணத்திற்கு ஆதரவாக அவர் பேசி அவர் நடித்திருப்பார். இதனை பிடிக்காத சிலர்தான் இவ்வாறு செய்கிறார்கள் என்றும், குவாரண்டைன் டைம் பாஸ் என்றும் சமுத்திரக்கனியை கலாய்ப்பதாக கூறப்படுகிறது.

மேலும், சிலர் பணம் கொடுத்து அவரை இதுபோன்ற இழிவுபடுத்த கூறியதாகவும் கூறப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleDia Movie Review; Dia is full of Surprises and Miracles
Next article31/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here