Home நிகழ்வுகள் இந்தியா 20-லட்சம் கோடியில் பிரதமர் அறிவித்த சிறப்பு திட்டம்

20-லட்சம் கோடியில் பிரதமர் அறிவித்த சிறப்பு திட்டம்

361
0
20-லட்சம் கோடியில் பிரதமர் அறிவித்த சிறப்பு திட்டம்

20-லட்சம் கோடியில் பிரதமர் அறிவித்த சிறப்பு திட்டம். நேற்று மாலை 8 மணியளவில் தொலைக்காட்சி வாயிலாக மக்கள் முன் பிரதமர் உரையாற்றினார்.

புதுதில்லி: முன்னதாக திங்களன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளியில் கலந்துரையாடிய பிறகு, நேற்று மாலை 8-மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் திரு.நரேந்திர மோடி பொதுமக்களுக்கு உரையாற்றினார்.

இந்தியாவில் கொரோனா நோய் தோற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, நிவாரண பணிகள், பொது முடக்கம் குறித்து அவர் பேசினார்.  அப்போது அவர் “இன்று கொரோனா பெருந்தொற்று உலகையே அச்சுறுத்திவருகிறது.

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சரிசெய்ய திட்டங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ‘ஆத்மநிர்பார் பாரத் அபியான்’ திட்டத்தின் கீழ் ரூ 20-லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

இந்த நிதி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% ஆகும். இந்தியாவின் வளர்ச்சி என்பது 5 முக்கிய அம்சங்களான பொருளாதாரம், மக்கள் சக்தி, உள்கட்டமைப்பு வசதிகள்,

உற்பத்தி தேவை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கியது. கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள உள்நாட்டு தொழிற்துறை தான் நமக்கு உதவியாக இருந்தது.

ஏழை எளிய மக்கள் துணிச்சலுடன் இந்த பேரிடரை எதிர்க்கொண்டு வருகின்றனர். நாம் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய சேதத்தை இந்த கொரோனா பெருந்தொற்று உலகளவில் ஏற்படுத்திவிட்டது.

கோடிக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் இந்த பெருந்தொற்றை எதிர்த்து போராடி வருகின்றனர்.  லட்சக்கணக்கான உயிர்களை காக்க இந்த உலகமே போராடிக்கொண்டிருக்கிறது.

இருந்தாலும் கொரோனா முன்பு நாம் தோல்வியடையவில்லை. கடந்த டிசம்பர் முதல் இதுவரை உலகளவில் 42 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  2.75 லட்சம் பேர் உலகளவில் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலும் பலர் தங்களுக்கு நெருக்கமான உறவுகளை இழந்து வாடி நிற்கின்றனர். அவர்களுக்கு நான் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனாவை கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை.

கொரோனா நம் நாட்டில் பரவா துவங்கிய போது நம்மிடம் தனிநபர் பாதுகாப்பு கவசம் ஒன்று கூட இல்லை. சில N95 மாஸ்குகள் மட்டுமே இருந்தன.

ஆனால் இப்போது 2 லட்சம் பாதுகாப்பு கவசங்கள் உள்ளன. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் N90 ராக முகக்கவசங்கள் தயாராகின்றன.

இந்த பெருந்தொற்று நேரத்தில் இந்தியா தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறது. உலகின் மகிழ்ச்சிக்கும்,  உலக நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் அமைதிக்காகவும் இந்தியா தொடர்ந்து பாடுபடும்.

இந்த கொரோனா வைரஸ் மிக நீண்ட நாட்களுக்கு நம்முடன் இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். நாம் வலிமையாக இருக்க வேண்டும். நாம் நம்மை காத்துக் கொள்ளவேண்டும்.

இதே நேரத்தில் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும்.  கொரோனா வைரஸ் நம்மைத் தாக்க அனுமதிக்காத வண்ணம் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

நாம் முகக் கவசத்தை அணியவேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். நான்காம் கட்ட ஊரடங்கு என்பது புதிய கட்டுப்பாடுகள்,  புதிய வரையறைகளை கொண்டதாக இருக்கும்.

நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து மே 18-ம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று மக்கள் முன் உரையாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here