Un Mela Oru Kannu Video Song; 4 வருடங்களுக்குப் பிறகு தாறுமாறா வியூஸ் வாங்கிய உன் மேல ஒரு கண்ணு பாடல்! சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வந்த ரஜினி முருகன் படத்திலுள்ள உன் மேல ஒரு கண்ணு பாடல் யூடியூப்பில் மட்டும் 75 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.
உன் மேல ஒரு கண்ணு பாடல் யூடியூப்பில் 75 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி ஆகியோரது நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் ரஜினி முருகன்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு கொடுத்த படம் ரஜினி முருகன்.
மசாலா காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படம் ரூ.51 கோடி வரையில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பெற்றது.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பாடலும் இன்றும் ரசிகர்களிடம் பேசப்படுகிறது. அதில் முக்கியமான பாடலான உன் மேல ஒரு கண்ணு பாடல் லவ்வர்ஸ்களின் மொபைல் ரிங் டோனாகவும் இருக்கிறது.
சமூக வலைதளங்களில் அதிகளவிலும் டிரெண்டாகி வருகிறது. எனக்குப் பிடித்த பாடல் என்றும் பலரும் இந்தப் பாடலை குறிப்பிட்டு பாடல் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தப் பாடல் யூடியூப்பில் மட்டும் 75 மில்லியன் வியூஸ் கடந்துள்ளது. அதோடு, ஒரு லடசத்திற்கும் அதிகமாகவே லைக்ஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.