Rajinikath; கேட்காமலேயே அள்ளிக் கொடுத்த ரஜினிகாந்த்: இயக்குநர்கள் சங்கம் பாராட்டு! ரஜினிகாந்த் கேட்காமலேயே பொருளுதவி செய்துள்ளதைத் தொடர்ந்து இயக்குநர்கள் சங்கம் பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரஜினிகாந்த் பொருளுதவி செய்துள்ளதைத் தொடர்ந்து இயக்குநர்கள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக வரும் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது.
கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், உதவி இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் என்று பலரும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக கடந்த மாதம் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்று ஃபெப்சி கூட்டமைப்பின் தலைவர் ஆர் கே செல்வமணி வேண்டுகோள் வைத்தார்.
அவரது வேண்டுகோளை ஏற்று சினிமா பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்துள்ளனர். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்தார்.
ஆனால், அவர் தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு ஒன்றும் கொடுக்கவில்லை.
இந்த நிலையில், இயக்குநர்கள் சங்கத்திற்கு ரஜினிகாந்த் பொருளுதவி வழங்கியுள்ளார். ஆம், இயக்குநர்கள் சங்கத்தினர் ரஜினியிடம் வேண்டுகோள் வைக்காமலேயே இந்த உதவியை செய்துள்ளார்.
கிட்டத்தட்ட 1500 பேருக்கு உதவும் வகையில், 10 கிலோ எடை கொண்ட அரசி மூடைகள் மற்றும் 6 கிலோ எடை கொண்ட மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.
இது குறித்து இயக்குநர்கள் சங்கம் ரஜினியை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்றைய கோவிட் 19 வைரஸ் எதிர்ப்பில் தொழில் இன்றி வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் உங்கள் கலைக் குடும்பத்தின் இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்கு தாங்கள் இன்று அனுப்பி வைத்த நிவாரண பொருட்கள் கிடைக்கப் பெற்றோம்.
குறிப்பறிந்து கேட்காமலேயே, உங்கள் கலைக்குடும்ப சகோதரர்களுக்கு வாரி வழங்கும் தங்கள் கொடையுள்ளத்தை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. போற்றுகிறோம்.
தங்கள் நலமும் புகழும் உயரட்டும் குடும்பம் நீடுழி வாழட்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.