Home சினிமா கோலிவுட் வார்த்தைகள் இல்லை, இந்த வள்ளலை பாராட்ட: கேப்டனை பாராட்டிய சேரன்!

வார்த்தைகள் இல்லை, இந்த வள்ளலை பாராட்ட: கேப்டனை பாராட்டிய சேரன்!

0
312
Vijayakanth

வார்த்தைகள் இல்லை, இந்த வள்ளலை பாராட்ட: கேப்டனை பாராட்டிய சேரன்! கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால், ஆண்டாள் அழகர் கல்லூரியில் அடக்கம் செய்து கொள்ளலாம் என்று விஜயகாந்த் கூறியதைத் தொடர்ந்து இயக்குநர் சேரன் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்க செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியில் அடக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறிய தேமுதிக தலைவர் விஜயகாந்தை இயக்குநர் சேரன் பாராட்டியுள்ளார்.

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக மே 3 ஆம் தேதி வரையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

யாருமே வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், மக்களை காக்கும் பணியில் காவல் துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என்று பலரும் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த பணியில் ஈடுபடும் போது சிலர் தங்களது உயிரையே தியாம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பினால், நரம்பியல் மருத்துவர் சைமன் உயிரிழந்தார்.

ஆனால், அவரை உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பும், தாக்குதலும் எழுந்தது. போலீஸ் பாதுகாப்புடன், மருத்துவர்களே அடக்கம் செய்யும் நிலை வந்தது.

இந்த நிலையில், தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், ஆண்டாள் அழகர் கல்லூரியில் அடக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து இயக்குநர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜயகாந்துக்கு பாராட்டு தெரிவித்தார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

வார்த்தைகள் இல்லை… இந்த வள்ளலை பாராட்ட… வாழவேண்டியரும் வாழவைக்க வேண்டியவரும் நீங்கள்தான் கேப்டன். உங்க பெரிய மனசுல உங்க உயரத்தை இன்னும் உயர்த்திக்கொண்டீர்கள்.

கொரோனாவில் பலியாகும் உயிருக்கு அடைக்கலம் தந்த இலக்கியங்கள் காணாத வள்ளல்… என பாராட்டி பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here