Home விளையாட்டு 2020 கிரிக்கெட்  உலகக் கோப்பை  கிரிக்கெட் போட்டி  2021 ஆண்டிற்கு தள்ளிப்போக வாய்ப்பு  – மெக்குலம்...

2020 கிரிக்கெட்  உலகக் கோப்பை  கிரிக்கெட் போட்டி  2021 ஆண்டிற்கு தள்ளிப்போக வாய்ப்பு  – மெக்குலம் .

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு ( 2020 ) T 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருந்தது . 16 நாடுகள் பங்கு பெற இருந்தது.

247
0

 

கிரிக்கெட் உலககோப்பைகள் மிகப்பிரபலம் , அதிலும்  இருபது ஓவர் போட்டிகள் என்றால் விறு விறு சுறு சுறு தான் . ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு ( 2020 ) T 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருந்தது . 16 நாடுகள் பங்கு பெற இருந்தது.

“ இந்த ஆண்டு நடைபெற இருந்த இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அனேகமாக அடுத்த ஆண்டு தான் நடைபெறும் என்றே நினைக்கிறன் , ஏன் என்றால் உலகம் முழுவதும் கொரோனா நோய் பெரும் பயத்தையும் , பாதிப்பையும் ஏற்படுத்திவிட்டது . ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்துவது மிகவும் கடினம் , அப்படி நான் நடத்த முடியாது என்று கூறவில்லை அவ்வாறு நடத்துவது நன்றாக இருக்காது.

நடைமுறைச் சிக்கல்கள் நிறைய உள்ளது , 16 நாடுகளின் வீரர்களும் ஆஸ்திரேலியாவிற்கு பயணம் செய்வது நாம் நினைக்கும் அளவிற்கு சுலபம் இல்லை . போட்டிகளை அவசரப்பட்டு நடத்திவிட்டு பின்னால் வருந்தவோ அல்லது போட்டிகள் இடையில் தடைப்பட்டு ரத்து ஆவதோ மேலும் சிக்கல் .

எனவே போட்டிகள் நன்றாக நடத்தப்பட வேண்டும் என்றால் சில காலம் தாமதமாவது ஒன்றும் தவறில்லை “ இவ்வாறு நியூசிலாந்து அணியின் பிரபல அதிரடி ஆட்டக்காரர் மெக்குலம் தெரிவித்தார் .

 

சா.ரா 

 

Previous articleஎன் மீது உள்ள வாழ் நாள் தடையை நீக்க வேண்டும் – சலீம் மாலிக் 
Next articleவார்த்தைகள் இல்லை, இந்த வள்ளலை பாராட்ட: கேப்டனை பாராட்டிய சேரன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here