Rana Wedding Ceremony; வைரலாகும் ராணாவின் திருமண சடங்கு புகைப்படம்! நடிகர் ராணா மற்றும் மிஹீகா பஜாஜ் திருமண சடங்கு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராணா டகுபதியின் திருமண சடங்கு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தல அஜித் நடித்த ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ராணா டகுபதி. அதன் பிறகு பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தினார்.
இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
தற்போது மடை திறந்து, காடன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 36 வயதாகும் ராணாவுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இதனால் என்னவோ பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராணா தனது காதலியின் புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ் தான் தனது காதலி என்று அவரை அறிமுகம் செய்துள்ளார்.
மிஹீகா பஜாஜ் ஹைதராபாத்தில் டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிகழ்ச்சி மேலாண்மை (Event Management), ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை தனது டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொண்டு வருகிறார்.
அதோடு மாடலாகவும் இருந்து வருகிறார். சில விளம்பரங்களிலும், அட்டைப் படங்களிலும் தோன்றியுள்ளார். காதலியை அறிமுகம் செய்து வைத்த கையோடு நிச்சயம் நடந்ததாக புகைப்படங்கள் வெளியானது.
ஆனால், அது நிச்சயதார்த்தம் இல்லை என்றும், வெறும் பூ முடித்தல் விழா என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது ராணாவின் திருமண சடங்கு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள Taj Falaknuma அரண்மனையில் ராணா – மிஹீகா பஜாஜ் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திருமணம் நிகழ்ச்சியில் 50 பேர் மட்டுமே பங்கேற்க இருக்கின்றனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.