Home Latest News Tamil Jio free data : எக்கச்சக்க சலுகைகள் வழங்கியுள்ளது ஜியோ

Jio free data : எக்கச்சக்க சலுகைகள் வழங்கியுள்ளது ஜியோ

769
0
jio free data ஜியோ டேட்டா

ஜியோ free data : கரோனா வைரஸ் காரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எக்கச்சக்க சலுகைகள் தனது ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கியுள்ளது .

ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்காக இரண்டு முறை ஊதியம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகின்ற காரணத்தினால் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பல நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களின் பணிபுரியும் முறையை மாற்றி உள்ளது.

பெரிய நிறுவனங்களும் அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால் அவர்களின் ஊழியர்கள் குறைவான சிக்கல்களை எதிர்கொள்ள வசதியாக இருக்கும். இந்த வரிசையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மேலும் ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது அந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கும் சேர்த்து பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது .

ரிலையன்ஸ் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு இரண்டு முறை பணம் கொடுக்கும் .

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு ஒரு மாதத்திற்கு இரண்டு முறை சம்பளம் வழங்குவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது.

நிறுவன தகவலின்படி மாதத்திற்கு ரூபாய் 30 ஆயிரத்துக்கும் குறைவான ஊதியத்தில் வேலை செய்பவர்களுக்கு மாதத்திற்கு இரண்டு முறை சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பணப்புழக்கம் மற்றும் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களுக்கு உதவியாக இருக்கும் .

covid- 19 க்கு எதிராக இந்த திட்டத்தை செயல்படுத்த ரிலையன்ஸ் அறக்கட்டளை, ரிலையன்ஸ் சில்லறை விற்பனை, ஜியோ ரிலையன்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் குடும்பத்தின் 6 லட்சம் உறுப்பினர்கள் அனைவரையும் இணைத்து உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

இது மட்டுமல்லாமல் கூடுதலாக சுகாதார தொழிலாளர்களுக்கான முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு பொருட்கள் அனைத்தையும் அந்த நிறுவனம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முகமூடிகளை உற்பத்தி செய்வதற்கான உற்பத்தித்திறனை விரிவுபடுத்தி உள்ளது.

இதனால் பாதுகாப்பு பொருட்கள் மற்றும் ஆடைகள் போன்ற ஏராளமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் coronavirus சவாலை எதிர்த்து போராட சுகாதார பணியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .

இலவச டேட்டா 

இந்த 21 நாட்கள் காலத்திற்கான அடிப்படை ஜியோ பைபர் பிராட்பேண்ட் இணைப்பை 10 Mbps வேகத்துடன் ஜியோ வழங்கும். அதுமட்டுமில்லாமல் இதற்காக எந்த சேவைக் கட்டணமும் ஜியோ வசூல் செய்யாது.

jio plan பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்

அதுமட்டுமில்லாமல் ஜியோ தனது addon ல் இரட்டை டேட்டா வழங்கும் என்று அறிவித்துள்ளது. இந்த சேவைகளுக்காக தேவையை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here