RSAvsAUS 2nd T20: ஆஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுத்தது தென் ஆப்பிரிக்கா. 12 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை வென்றது.
RSAvsAUS 2nd T20 2020
பிப்.24: போர்ட் எலிசபெத்தில் நேற்று நடந்த தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இரண்டாவது டி20 போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை வென்றது.
டாஸ் வென்ற ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்து 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க ஆட்டகாரர் கேப்டன் குயின்டன் டிகாக் அதிரடியாக ஆடி 47 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார்.
ஆஸ்திரேலியா தரப்பில் கேன் ரிச்சர்ட்சன் 21 ரன்களுக்கு 2 விக்கெட் வீழ்த்தினார். 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா கடைசி பத்து ஓவர்களில் ரன்கள் எடுக்க திணறினார்கள்.
தென் ஆப்ரிக்காவின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழந்து 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 12 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
ஆட்டநாயகாக தென் ஆப்பிரிக்காவின் டி காக் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த பிப்ரவரி 21-தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியாவிற்கு இரண்டாவது போட்டியில் பதிலடி தந்தது தென் ஆப்பிரிக்கா.
கோப்பையை தீர்வு செய்யும் மூன்றாவது மற்றும் இறுதி ஆட்டம் வருகிற 26-ஆம் தேதி கேப் டவுனில் நடைபெறுகிறது.